

காங்கிரஸ் கட்சியின் முதன்மை கொறடா ஜோதிராதித்ய சிந்தியா வுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் பாஜக உறுப் பினர்கள் நேற்று வலியுறுத்தினர்.
ரோஹித் வெமுலா விவகாரத் தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அவையை தவறாக வழி நடத்தினார் என்று கூறி அவருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் வலி யுறுத்தி வரும் நிலையில், பாஜகவும் இவ்வித கோரிக்கையை சிந்தியா வுக்கு எதிராக எழுப்பியது.
மக்களவையில் பாஜக முதன்மை கொறடா அர்ஜுன் ராம் மெகவால் இந்த விவகாரத்தை நேற்று எழுப்பினார். அப்போது அவர், “ஹைதராபாத் மத்திய பல் கலைக்கழக விடுதியில் தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவர் ரோஹித் வெமுலா தேசவிரோதி, ஜாதி வெறி பிடித்தவர், தீவிரவாதி என்று மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறியதாக ஜோதிராதித்ய சிந்தியா மக்களவை யில் கடந்த 24-ம் தேதி கூறினார்.
அவையில் தவறான தகவலை தெரிவித்த சிந்தியாவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வருவதற்கு நோட்டீஸ் அளித் துள்ளோம்” என்றார்.
இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்குச் சென்று, மத்திய அமைச்சர் ஸ்மிருதிக்கு எதிராக தாங்கள் அளித்துள்ள உரிமை மீறல் தீர்மான நோட்டீஸ் குறித்து சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அப்போது தத்தாத்ரேயா எழுந்து, “ரோஹித் வெமுலா குறித்து நான் ஒருபோதும் அத்தகைய வார்த்தை களை கூறவில்லை. வெங்காயம் விற்ற ஏழைப் பெண்ணின் மகன் நான். நான் எப்போதும் தலித், பிற் படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனுக் காக பாடுபட்டு வருபவன். தலித் மக்களுக்காக பல தியாகங்கள் செய் துள்ளேன். அமைச்சர் ஸ்மிருதிக்கு எழுதிய கடிதத்தில் ரோஹித் பெயரை நான் குறிப்பிடவில்லை. அவருக்கு எதிராக எந்த குற்றச்சாட் டும் வைக்கவில்லை” என்றார்.
இதையடுத்து சபாநாயகர், “உரிமை மீறல் தீர்மானம் தொடர் பான அனைத்து நோட்டீஸ்களும் எனது பரிசீலனையில் உள்ளது” என்று கூறி பாஜக, காங்கிரஸ் உறுப்பினர்களை சமாதானப்படுத்த முயன்றார்.