Published : 30 Dec 2021 07:23 PM
Last Updated : 30 Dec 2021 07:23 PM

'நான் பிரதமர் மோடியைப் பின்பற்றுகிறேன்': மாஸ்க் அணியாததற்கு காரணம் சொன்ன சிவசேனா எம்.பி.

பொது நிகழ்ச்சியில் மாஸ்க் அணியாமல் இருந்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத், அதற்கு பிரதமர் நரேந்திர மோடியை காரணம் காட்டியுள்ளார்.

முன்னதாக நேற்று நாசிக் நகரில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் முகக்கவசம் அணியாமல் கலந்து கொண்டார்.

மாநிலங்களவை எம்.பி.யான அவர் மக்களுக்கு முகக்கவசம் அணிவதில் முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு சஞ்சய் ரவுத், "பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவரையும் மாஸ்க் அணியச் சொல்கிறார். ஆனால் அவர் அணிவதில்லை. எங்கள் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே எப்போதும் முகக்கவசம் அணிகிறார். ஆனால் மோடி தேசத்தின் தலைவர். அதனால் நான் பிரதமரைப் பின்பற்றி முகக்கவசம் அணிவதில்லை. மோடியைப் பார்த்து மக்களும் முகக்கவசம் அணிவதில்லை. ஆனால், பொதுமக்கள் அனைவரும் பொது விழாக்களுக்குச் செல்லும் போது கரோனா தடுப்பு நடவடிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

நாட்டிலேயே டெல்லிக்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் தான் அன்றாட கரோனா தொற்றுப் பதிவும் அதிகம், ஒமைக்ரான் பதிவும் அதிகம்.

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சூலே, அவரது கணவர் ஆனந்த் சூலே, என்சிபி எம்.எல்.ஏ. ப்ரஜக்த் தான்பூரே, மகாராஷ்டிரா கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் ஆகியோருக்கு கரோனா உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x