

மகாசிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீகாளஹஸ்தி உட்பட ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் பக்தர் களின் கூட்டம் நேற்று அலை மோதியது.
நாடு முழுவதும் நேற்று சிவராத்திரி கொண்டாடப்பட்டது. ஆந்திராவில் உள்ள முக்கிய சிவன் கோயில்களான ஸ்ரீகாளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருப்பதிகபிலேஸ்வரர் உள்ளிட்ட கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும் புண்ணிய நதிகளில் நீராடிய பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து சுவாமியை வழிபட்டனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயி லில் தற்போது மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு நேற்று காலை மூலவர்களுக்கு 10 ஆண்டு களுக்கு பிறகு, தங்க அங்கி உடுத் தப்பட்டது. மேலும்,உற்சவ மூர்த்தி களான ஞான பூங்கோதை தாயார் சமேத காளத்திநாதர் அதிகார நந்தி வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் இரவு உற்சவ மூர்த்திகள் சிம்ம வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
பிரம்மோற்சவ விழாவை யொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் முழுவதும் வண்ண விளக்குகளாலும், வண்ண மலர் களாலும் அலங்கரிக்கப்பட் டிருந்தது. அதிகாலை 2 மணியில் இருந்து பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர். இரவு லிங்கோத்பவ தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.
இதேபோல திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோயிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி யது. உற்சவர்கள் போகி தேரில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். ஸ்ரீசைலம் மல்லிகார் ஜுனா கோயிலிலும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.
தெலங்கானா கரீம்நகரில் உள்ள ராஜராஜேஷ்வர் கோயில், காலேஷ்வர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் மகாசிவராத் திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை கள், அபிஷேகங்கள் நடை பெற்றன. இதில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் பங்கேற்றனர்.