Published : 28 Dec 2021 08:16 PM
Last Updated : 28 Dec 2021 08:16 PM

பஞ்சாயத்து தலைவர் ரூ.15 லட்சத்துக்கும் மேல் லஞ்சம் வாங்கினால் மட்டுமே என்னிடம் முறையிடுங்கள்: பாஜக எம்.பி. பேச்சு

போபால்: பஞ்சாயத்துத் தலைவர் ரூ.15 லட்சத்துக்கு மேல் லஞ்சம் வாங்கினால் மட்டுமே என்னிடம் முறையிடுங்கள் இல்லாவிட்டால் சொல்லாதீர்கள் என்று பேசி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் பாஜக எம்.பி. ஒருவர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி. ஜனார்த்தன் மிஸ்ரா. இவர் அண்மையில் தற்கால சவால்களை சந்திப்பதில் ஊடகத்தின் பங்கு என்ற தலைப்பிலான கருத்தரங்கில் உரையாற்றினார்.

அப்போது அவர், "என்னிடம் அடிக்கடி பஞ்சாயத்துத் தலைவர்கள் மீதான லஞ்ச ஊழல் புகார்கள் வருகின்றன. அவர்களிடம் நான் விளையாட்டுவதாக சொல்வதுண்டு. பஞ்சாயத்துத் தலைவர்கள் ரூ.15 லட்சத்துக்கும் மேல் லஞ்சம் வாங்கியதாகத் தெரிந்தால் என்னிடம் வந்து புகார் செய்யுங்கள். இல்லாவிட்டால் சொல்லாதீர்கள் என்பேன். ஏன் தெரியுமா? ஒரு பஞ்சாயத்துத் தலைவர் ஒரு தேர்தலில் போட்டியிட குறைந்தது ரூ.7 லட்சம் செலவிட வேண்டும். அடுத்த தேர்தலில் போட்டியிட அதே ரூ.7 லட்சத்தை செலவிட வேண்டும். அதன் பின்னர் பணவீக்கத்தைப் பொறுத்து அந்த ஒரு லட்சமும் செலவில் அடங்கும்" என்று கூறினார்.

அவருடைய பேச்சு அதிர்ச்சியை அளித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கும் உள்ளாகி வருகிறது.

அண்மையில், உத்தரபிரதேச தொழிலதிபர் பியூஷ் ஜெயின் வீடுகளில் இருந்து இதுவரை ரூ.284 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு இவர் நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது.

இதனை முன்வைத்து சமாஜ்வாதியை பாஜக விமர்சித்து வருகிறது. இந்நிலையில், பாஜக எம்.பி. ஒருவர் லஞ்சத்தை ஆதரித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x