Published : 28 Dec 2021 06:01 PM
Last Updated : 28 Dec 2021 06:01 PM

‘‘சவால்களை எதிர்கொண்டால்  வேட்டையாடுபவராக மாறுவீர்கள்’’- பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

கான்பூர்: சவால்களை நீங்கள் எதிர்கொண்டால் நீங்கள் வேட்டையாடுபவராகவும் மாறுவீர்கள் என கான்பூர் ஐஐடி பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடையே பிரதமர் மோடி பேசினார்.

கான்பூர் ஐஐடியில் 54-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் பிளாக்செயின் தொழில்நுட்ப அடிப்படையிலான டிஜிட்டல் முறை பட்டமளிப்பை தொடங்கி வைத்தார். அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:

மெட்ரோ ரயில் வசதியைப் பெறுவதால் கான்பூர் நகருக்கு இது மகத்தான நாளாகும். மேலும் மாணவர்கள் பயிற்சி நிறைவுப் பெறுவதால் உலகத்திற்கு விலை மதிப்பில்லாத பரிசை கான்பூர் வழங்கியிருக்கிறது. மாணவர் சேர்க்கைக்கும், கான்பூர் ஐஐடி-யிலிருந்து பயின்று வெளியேறுவதற்கும் இடையே உங்களுக்குள் மகத்தான மாற்றத்தை நீங்கள் உணர வேண்டும்.

இங்கே வருவதற்கு முன் அறியாதவைப் பற்றிய அச்சம் இருந்திருக்க வேண்டும், அல்லது அறியாததுப் பற்றிய கேள்வி இருந்திருக்க வேண்டும். இப்போது அறியாததைப் பற்றிய அச்சம் இல்லை. மொத்த உலகத்தையும் கண்டறியவதற்கான துணிவை நீங்கள் இப்போது பெற்றிருக்கிறீர்கள். அறியாதவைப் பற்றிய கேள்வி இப்போது இல்லை. இப்போது அது சிறந்தவற்றுக்கான தேடலையும் மொத்த உலகத்தை ஆதிக்கம் செலுத்தும் கனவையும் கொண்டிருக்கிறது.

1930-களில் 20-25 வயதிலிருந்த இளைஞர்கள் சுதந்திரம் பெற்ற 1947 வரை அமைதியான ஒரு பயணத்தை மேற்கொண்டிருக்க வேண்டும். அதுவே அவர்களது வாழ்க்கையின் பொன்னான கட்டமாக இருந்தது. இன்று நீங்களும் கூட அதே போன்ற பொன்னான காலத்தில் அடியெடுத்து வைக்கிறீர்கள். நாட்டுக்கு இது அமிர்த காலமாக இருப்பது போலவே உங்கள் வாழ்க்கையிலும் இது அமிர்த காலமாக இருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு எரிசக்தி, பருவநிலைத் தீர்வுகள், சுகாதாரத் தீர்வுகளில் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை இவையெல்லாம் உங்களின் வெறும் பொறுப்புகள் மட்டுமல்ல, நீங்கள் நிறைவேற்ற இருக்கும் நல்ல வாய்ப்பு பல தலைமுறைகளின் கனவுகளாகும். விருப்பமான இலக்குகளை முடிவு செய்கிற இந்த காலத்தில் உங்களின் திறன் முழுவதையும் பயன்படுத்தி அவற்றை சாதிக்க வேண்டும்.

21 ஆம் நூற்றாண்டு என்பது முழுக்க முழுக்க தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது. இந்த தசாப்தத்திலும் கூட தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் அதன் செல்வாக்கை அதிகரிக்கவிருக்கிறது. தொழில்நுட்பம் இல்லாத வாழ்க்கை பூர்த்தியடையாததாகும். வாழ்க்கையில் போட்டியும், தொழில்நுட்பமும் நிறைந்த இந்த காலத்தில் மாணவர்கள் நிச்சயம் அவற்றிலிருந்து விடுபட்டு விடுவார்கள் .

இன்று நாட்டின் சிந்தனையும், அணுகுமுறையும் உங்களைப் போலவே இருக்கிறது. முந்தைய காலம் துல்லியமான செயல்பாட்டு சிந்தனையாக இருந்திருந்தால் தற்போதைய சிந்தனை செயல்வடிவமாகவும், பயன் விளைவிப்பதாகவும் இருந்திருக்கும். முந்தைய காலம் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கான முயற்சியாக இருந்திருந்தால் இன்றைய தீர்மானங்கள் அந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதாக இருந்திருக்கும்.

சுதந்திரத்தின் 25-வது ஆண்டிலிருந்து தேசத்தின் கட்டமைப்பிற்குப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டிய நேரம் வீணாக்கப்பட்டது. நாட்டின் சுதந்திரம் 25 ஆண்டுகளை நிறைவு செய்தபோது நமது சொந்த காலில் நிற்பதற்கு ஏராளமானவற்றை நாம் செய்திருக்க வேண்டும். அதன் பிறகு காலம் மிகவும் கடந்து விட்டது, நாடு ஏராளமான நேரத்தை வீணாக்கியுள்ளது. இதற்கிடையில் இரண்டு தலைமுறைகள் கடந்து விட்டன. எனவே இரண்டு நிமிடங்களைக் கூட நாம் வீணாக்கக் கூடாது.

தற்சார்பு இந்தியா என்பது எவரையும் சார்ந்திருக்காத முழுமையான சுதந்திர வடிவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். ஒவ்வொரு நாடும் வெளிப்படுத்துவதற்கு ஒரு செய்தியையும், நிறைவேற்றுவதற்கு ஒரு இயக்கத்தையும் அடைவதற்கு ஒரு இலக்கையும் கொண்டிருக்கிறது. நாம் தற்சார்பு உடையவர்களாக இல்லாவிட்டால், நமது நாடு எவ்வாறு அதன் விருப்பங்களை நிறைவேற்றும், எவ்வாறு அதன் இலக்குகளை அடையும் என்று சுவாமி விவேகானந்தர் கூறியதை நினைவுபடுத்துகிறேன்.

வணிகம் செய்வதை எளிதாக்குவதில் மேம்பாடு, கொள்கைகளுக்கான தடைகள் அகற்றம் ஆகியவற்றின் விளைவுகள் தெளிவாகத் தெரிகின்றன. சுதந்திரத்தின் இந்த 75-வது ஆண்டில் 75-க்கும் அதிகமான அதிக முதலீடு கொண்ட 75-க்கும் அதிகமான தொழில் நிறுவனங்களையும், 50,000-க்கும் அதிகமான புதிய தொழில்களையும் இந்தியா பெற்றிருக்கிறது. உலகின் இரண்டாவது பெரிய புதிய தொழில்களின் குவி மையமாக இந்தியா இன்று உருவாகியுள்ளது. பல புதிய தொழில்கள் ஐஐடிகளைச் சேர்ந்த இளைஞர்களால் தொடங்கப்பட்டுள்ளன. உலகளவில் நாடு உயர்ந்து நிற்க மாணவர்கள் பங்களிக்க வேண்டும்.

இந்திய நிறுவனங்களையும், இந்திய தயாரிப்புகளையும் விரும்பாத இந்தியர்கள் உலகப் பொருட்களுக்கு மாறி விடுகிறார்கள். ஐஐடிகளை அறிந்தவர்கள், இங்குள்ள திறமைகளை அறிந்தவர்கள், இங்குள்ள பேராசிரியர்களின் கடின உழைப்பை அறிந்தவர்கள் ஐஐடிகளின் இளைஞர்கள் நிச்சயமாக இதை மாற்ற முடியும்.

நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வாழ்க்கையில் சவால்கள் இருக்கும். அவற்றிலிருந்து தப்பி ஓடுகின்றவர்கள் அவற்றுக்கு பலியாகி விடுவார்கள். ஆனால் சவால்களை நீங்கள் எதிர்கொண்டால் நீங்கள் வேட்டையாடுபவராகவும், சவால்கள் வேட்டையாடப்படுபவையாகவும் மாறும்.

உணர்வு, ஆர்வம், கற்பனை, படைப்பாக்கம் ஆகியவற்றை தங்களுக்குள் உயிரோட்டமாக வைத்திருக்க வேண்டும். வாழ்க்கையில் தொழில்நுட்ப திறன் இல்லாத அம்சங்களில் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியையும், அன்பையும் பகிர்ந்துக் கொள்ள நேரம் வரும்போது கடவுச்சொல் எதையும் வைத்திருக்காதீர்கள், திறந்த மனதுடன் வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x