மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு: இரு அவைகளிலும் பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தல்

மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு: இரு அவைகளிலும் பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தல்
Updated on
2 min read

மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மாநிலங் களவையில் பெண் எம்.பி.க்கள் கட்சிப் பாகுபாடின்றி ஒருமித்த குரலில் வலியுறுத்தினர். மக்களவை யிலும் இது எதிரொலித்தது.

மாநிலங்களவையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறை வேற்றப்பட்டு விட்டது. ஆனால், மக்களவையில் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, மாநிலங்களவை யில் கட்சிப் பாகுபாடின்றி அனைத்துக் கட்சியின் பெண் எம்.பிக்களும் இதுதொடர்பாக பூஜ்ஜிய நேர நோட்டீஸ் அளித்து பிரச்சினை எழுப்பினர்.

2010-ம் ஆண்டு மாநிலங்களவை யில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீது தற்போதைய அரசின் நிலை என்ன என காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள், கேள்வி எழுப்பினர்.

அதற்கு, இதுதொடர்பாக விவா திக்க அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

“ஓர் அமைச்சராக பூஜ்ஜிய நேர நோட்டீஸ் அளிக்க முடியாது. ஆனால், இப்பிரச்சினையில் பேச விரும்புகிறேன்” என சிறுபான்மை யினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.பி. ரஜனி பாட்டில் பேசும்போது, “கிராம பஞ்சாயத்துகளில் 73-வது சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்ததன் மூலம் ராஜீவ் காந்தியும், மாநிலங் களவையில் மகளிர் மசோதாவை நிறைவேற்றி மன்மோகன் சிங்கும் அரசியல் உறுதியை வெளிப்படுத்தி னர். பிரதமர் மோடி, மக்களவையில் இம்மசோதாவை நிறைவேற்றி அரசியல் உறுதியை வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.

அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா பேசும்போது, “மகளிர் மசோதா பிரச்சினை வெறும் பச்சாதாபத்துக் காக எழுப்பப்படுகிறது. இன்றும் பெண்கள் பாராபட்சத்துடன் நடத்தப்படுகிறார்கள்” என்றார்.

மக்களவை

மக்களவையிலும் இது எதிரொலித்தது. கோவிலுக்குள் சென்று வழிபட பெண்களை அனு மதிக்க வேண்டும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அறிமுகப் படுத்த வேண்டும் என பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தினர். நிதி உள்ளடக்கம், கல்வி ஆகியவை பெண்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் என வலியுறுத்தப்பட்டது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவது மட்டும் தீர்வாகாது, பெரிய அள விலான திட்டங்களில் பங்குபெறச் செய்வது பெண்களின் நிலையை உயர்த்தும் என கருத்து தெரி விக்கப்பட்டது. நாடாளுமன்ற நிலைக்குழுவில் பெண் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என சில பெண் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.

திரிணமூல் காங்கிரஸ், பாஜக, பிஜு ஜனதா தளம், சிவ சேனா என பல்வேறு கட்சி எம்.பி.க்களும் மகளிர் மசோதா மற்றும், மகளிர் மேல் காட்டப்படும் பாரபட்சம் குறித்துப் பேசினர்.

காங்கிரஸ் முக்கிய பங்கு

மக்களவையில் சோனியா காந்தி பேசியதாவது:

பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகித்து வருகிறது. குறிப்பாக, இந்த நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவர், முதல் பெண் பிரதமர், முதல் பெண் மக்களவைத் தலைவர் ஆகிய பதவிகளை காங்கிரஸ் கட்சி வழங்கி உள்ளது.

நாடாளுமன்றம், மாநில சட்டப் பேரவைகளில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நீண்ட காலமாக நிலுவை யில் உள்ளது. இதை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வெங்கய்யா விளக்கம்

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு இவ்விவாதங்களுக்குப் பிறகு பேசும்போது, “மகளிர் மசோதா தொடர்பாக அனைத்துக் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விரைவிலேயே சாதிப்போம் என நம்புகிறோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in