பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க 2-வது மாடியில் இருந்து குதித்த இளம்பெண் உயிர் தப்பினார்: நண்பர் உட்பட 3 பேர் கைது

பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க 2-வது மாடியில் இருந்து குதித்த இளம்பெண் உயிர் தப்பினார்: நண்பர் உட்பட 3 பேர் கைது
Updated on
1 min read

பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க 2-வது மாடியில் இருந்து கீழே குதித்த இளம்பெண், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுதொடர்பாக நண்பர் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேற்குவங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டம் ரிஷ்ரா பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் 2 ஆண் நண்பர்களும் ஹவுரா மாவட்டம் லிலுவா நகர் பேயராபாகன் பகுதியில் உள்ள மற்றொரு ஆண் நண்பரை சந்திக்க நேற்றுமுன்தினம் சென்றனர்.

அங்கு நண்பர்கள் எல்லோரும் மது அருந்தி உள்ளனர். இளம்பெண்ணையும் மது அருந்த சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளனர். பின்னர் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளனர். அதை அருந்திய சிறிது நேரத்தில் தூக்க கலக்கத்தை உணர்ந்தார் இளம்பெண்.

ஏதோ தவறு நடக்க போவதை உணர்ந்த அந்த பெண் உடனடியாக 2-வது மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்தனர். பின்னர் இளம்பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளம்பெண் கீழே விழுந்த இடத்தில் மணல் கொட்டப்பட்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியுள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து நண்பர்கள் 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in