Published : 26 Dec 2021 05:22 PM
Last Updated : 26 Dec 2021 05:22 PM

குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் மத்திய அரசின் முடிவு அறிவியல்பூர்வமற்றது: எய்ம்ஸ் மூத்த மருத்துவர் கருத்து


புதுடெல்லி :குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் மத்திய அரசின் முடிவு அறிவியல்பூர்வமற்றது. இந்த முடிவால் எந்தவிதமான கூடுதல் நலனும் விளையாது என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் தொற்றுநோய்தடுப்பு பிரிவின் மூத்த மருத்துவர் சஞ்சய் கே ராய் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, 15 முதல் 18 வயதுவரை உள்ள பிரிவினருக்கு 2022, ஜனவரி 3ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவி்த்தார்.

முன்களப்பணியாளர்கள், 60வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய்கள் இருப்போருக்கு பூஸ்டர் தடுப்பூசி ஜனவரி 10ம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவித்தார்.

கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கும் வயதுவந்தோருக்கும் அளித்து பரிசோதிக்கும் பிரிவின் தலைமை ஆய்வாளராக மருத்துவர் சஞ்சய் கே ராய் இருந்து வருகிறார். இந்திய பொது சுகாதார கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்துவரும் சஞ்சய் கே ராய் பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டை டேக் செய்து கருத்துப் பதிவிட்டுள்ளார்.

அதில் “ நான் பிரதமர் மோடியின் தன்னலமற்று தேசசேவைக்கு நான் ரசிகன். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்கும் பிரதமர் மோடி. ஆனால், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும்திட்டம் முற்றிலும் அறிவியல்பூர்வமற்றது. இது எனக்கு வேதனையளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் கே ராய் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த பல நாடுகள் தொடங்கிவிட்டன.அந்த நாடுகளின் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்தபின் மத்திய அரசுகுழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அறிவித்திருக்க வேண்டும். எந்த விதமான தலையீட்டுக்கும் தெளிவான நோக்கம் வேண்டும். நம்முடைய நோக்கம் கரோனா வைரஸின் தடுப்பதாகவோ அல்லது, உயிரிழப்பை தடுப்பதாகவோ அல்லது தீவிரத்தன்மையை குறைப்பதாகவோ இருக்கவேண்டும்.

ஆனால், தடுப்பூசி குறித்துநமக்குக் கிடைத்த தகவலின்படி, நோய் தொற்றிலிருந்து எந்தவிதமான பாதிப்பையும் தடுப்பூசியால் ஏற்படுத்தமுடியவில்லை. சில நாடுகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கூட நோய் தொற்று ஏற்படுகிறது.

பிரிட்டனில் மட்டும் தடுப்பூசி செலுத்திய 50ஆயிரம் பேர் தினசரி நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள். ஆதலால், தடுப்பூசி என்பது நோய் தொற்றைத் தடுக்காது, ஆனால் தீவிரத்தன்மையைத் தடுக்கும், உயிரிழப்பைத் தடுக்கும்.

கரோனாவால் உயிரிழப்பு என்பது 1.5 சதவீதமாக இருக்கிறது, அதாவது 10 லட்சத்துக்கு 15ஆயிரம் பேர் உயிரழக்கிறார்கள். தடுப்பூசி செலுத்துவதன் மூலம் 80 முதல் 90 சதவீதம் உயிரிழப்பைத் தடுக்க இயலும்.அதாவது 13 ஆயிரம் முதல் 14 ஆயிரம் பேர் உயிரைக் காக்க முடியும்.

தீவிமான பாதிப்புக்கு ஆளாகுவோரும் 10 முதல் 15 சதவீதம் பேர் குறைவார்கள். வயதுவந்தோர் பிரிவில் ஆய்வு செய்தால், மிகப்பெரியஅளவில் பலன்கிடைக்கும். குழந்தைகள்பிரிவில்எடுத்துக்கொண்டால், அவர்களுக்கு தொற்று ஏற்படுவது மிகக்குறைந்த வாய்ப்புதான் இருக்கிறது என்பது புள்ளிவிவரங்கள் அடிப்படையில் தெரிகிறது. 10லட்சத்துக்கு 2 பேர் மட்டுமே இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழந்தைகளைப் பொறுத்தவரை தடுப்பூசி செலுத்துவதால், நோயின்தீவித் தன்மை ஏற்படுவதும் குறைவு, உயிரிழப்பு ஏற்படுவதும் குறைவு அப்படியிருக்கும் போது இரு நோக்களுக்காக தடுப்பூசி ஏன் செலுத்தவேண்டும், இந்த நோக்கங்களை அதுநிறைவேற்றாதே. குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் தொடங்கிவிட்டன. அந்த நாடுகளின் தரவுகளை ஆய்வு செய்தபின் குழந்தைகளுக்கு தடுப்பூசிசெலுத்த தொடங்கியிருக்கலாம்

இவ்வாறு ராய் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x