Published : 26 Dec 2021 04:05 PM
Last Updated : 26 Dec 2021 04:05 PM

நிறவெறிக்கு எதிராக போராடிய பிஷப் டெஸ்மண்ட் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி: எமெரிட்டஸ் ஆர்ச்பிஷப் டெஸ்மண்ட் டுட்டு மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். நிறவெறிக்கு எதிராகப் போராடிய தென்னாப்பிரிக்கப் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு இன்று காலமானார். அவருக்கு வயது 90. நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக பதவியேற்றபோது வானவில் தேசம் என்ற சொல்லாடலை உருவாக்கி பிரபலப்படுத்தியவர் டுட்டு.

வெள்ளையர்களின் ஆட்சியை எதிர்த்து அமைதி வழியில் போராடியதால், 1984 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டெஸ்மண்ட் டுட்டுவுக்கு வழங்கப்பட்டது.

டெஸ்மண்ட் டுட்டு மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பதிவு ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது;

‘’ எமெரிட்டஸ் ஆர்ச்பிஷப் டெஸ்மண்ட் டுட்டு, உலகம் முழுவதும் எண்ணற்ற மக்களுக்கு வழிகாட்டும் விளக்காகத் திகழ்ந்தவர். மனித கண்ணியம் மற்றும் சமத்துவத்துக்கான அவரது வலியுறுத்தல் என்னென்றும் நினைவில் கொள்ளத்தக்கது. அவரது மறைவால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். அவரது ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியுறுவதாக.’’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x