Published : 26 Dec 2021 03:44 PM
Last Updated : 26 Dec 2021 03:44 PM

2-வது டோஸ் தடுப்பூசிக்கும் பூஸ்டர் டோஸுக்கும் இடைவெளி எவ்வளவு? புதிய தகவல்

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

ஒமைக்ரான் வைரஸ் பரவலை எதிர்கொள்ளும் வகையில் 2-வது டோஸ் தடுப்பூசிக்கும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கும் இடையிலான கால இடைவெளி 9 முதல் 12 மாதங்கள் வரை இருக்க வேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 26ம்தேதி கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ், தற்போது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிட்டது. குறிப்பாக பிரிட்டன் , அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் உலக நாடுகள் மீண்டும் சர்வேதச பயணத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்தியாவிலும் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு விமானநிலையத்திலேயே கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. அதிலும் எச்சரிக்கைபட்டியலில் இருக்கும் நாடுகளில் இருந்து வருவோருக்கு கட்டாய ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு, அதில்நெகட்டிவ் இருந்தால் மட்டுமே வெளியே அனுப்பப்படுகிறார்கள்.

இத்துனை கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் ஒமைக்ரான் தொற்று பல்வேறு மாநிலங்களில் நுழைந்துவிட்டது. ஒன்று என கணக்கைத் தொடங்கிய ஒமைக்ரான் தற்போது 400-க்கும் மேல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தடுப்பூசிகள் மூலம் மனிதர்களுக்கு கிடைத்த நோய் எதிர்ப்புச் சக்தியையும் மீறும் அளவில் ஒமைக்ரான் இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றார்கள். இதனால், பூஸ்டர் டோஸ்தடுப்பூசி அவசியம் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக மக்களுக்கு நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, 15 முதல் 18 வயதுவரை உள்ள பிரிவினருக்கு 2022, ஜனவரி 3ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவி்த்தார். முன்களப்பணியாளர்கள், 60வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய்கள் இருப்போருக்கு பூஸ்டர் தடுப்பூசி ஜனவரி 10ம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவித்தார்.

ஆனால், பூஸ்டர் டோஸ் என்ற வார்த்தையைப் பிரதமர் மோடி பயன்படுத்தாமல் முன்னெச்சரிக்கை டோஸ் என்ற வார்்த்தையில் குறிப்பிட்டார்.

இந்நிலையில் மத்திய அரசின் தடுப்பூசி தொழில்நுட்பக் குழு பூஸ்டர்அல்லது முன்னெச்சரிக்கை டோஸ் எத்தனை மாத இடைவெளியில் செலுத்தலாம் என்பது குறித்துஆலோசித்து வருகிறது. அதுகுறித்த அறிந்த வட்டாரங்கள் கூறுகையில் “ இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் பெரும்பாலும் மக்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளன.

இதில் இரு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு முன்னெச்சரி்க்கை தடுப்பூசி செலுத்த கால இடைவெளி குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 2-டோஸ் தடுப்பூசி செலுத்தியபின் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்த குறைந்தபட்சம் 9 முதல் 12 மாத இடைவெளி தேவைப்படும் என்று கூறப்படுகிறது” எனத் தெரிவிக்கின்றன.

ஆதலால், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவோர் 2-வது தடுப்பூசி செலுத்தி 9 முதல்12 மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும் என்றுகால இடைவெளி நிர்ணயிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஆனால்,இதுவரை கால இடைவெளி நிர்ணயிக்கப்படுவது குறித்து தேசிய தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனைக் குழு எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x