கால்பந்து பார்க்க எம்.எல்.ஏ.க்களை பிரேசிலுக்கு அனுப்பும் முடிவை ரத்து செய்தது கோவா அரசு: காங்கிரஸ் எதிர்ப்பு எதிரொலி

கால்பந்து பார்க்க எம்.எல்.ஏ.க்களை பிரேசிலுக்கு அனுப்பும் முடிவை ரத்து செய்தது கோவா அரசு: காங்கிரஸ் எதிர்ப்பு எதிரொலி
Updated on
1 min read

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க 3 அமைச் சர்கள், 3 எம்.எல்.ஏ.க்களை அரசு செலவில் பிரேசில் அனுப்பும் முடிவை கோவா மாநில அரசு ரத்து செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்பை அடுத்து கோவா மாநில பாஜக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மக்களின் உணர்வுகளுக்கு தலைவணங்கி இந்த முடிவை எடுத்திருப்பதாக அந்த மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் தவாத்கர் தெரிவித்துள்ளார்.

சொந்த செலவில் செல்கின்றனர்

இந்நிலையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை பார்ப்பதற்காக சொந்த செலவில் பிரேசில் செல்வது என கோவாவைச் சேர்ந்த 3 அமைச்சர்கள் உள்ளிட்ட 6 எம்.எல்.ஏ.க்களும் முடிவு செய் துள்ளனர்.

முன்னதாக மாநில அரசு சார்பில் ஆய்வு சுற்றுலா என்ற பெயரில் பாஜகவை சேர்ந்த 3 அமைச்சர்களும், 3 எம்.எல்.ஏ.க்களும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க பிரேசில் செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அரசு செலவில் அமைச்சர் களும், எம்.எல். ஏ.க்களும் இன்பச் சுற்றுலா செல்கின்றனர் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இது தொடர் பாக பிரதமர் மோடியிடம் புகார் தெரிவிக்க இருப்பதாகவும் கோவா மாநில காங்கிரஸ் அறிவித்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட விளையாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் தவாத்கர், மீன்வளத்துறை அமைச்சர் அவர்டானோ பர்டாடோ, மின்சாரத் துறை அமைச்சர் மிலிந்த் நாயக் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் நேற்று உடனடியாக கூடி ஆலோசனை நடத்தினர்.

இதன் பிறகு செய்தியா ளர்களிடம் பேசிய பர்டாடோ, எங்கள் சொந்த செலவிலேயே பிரேசில் செல்ல முடிவெடுத் துள்ளோம். எங்களுக்காக அரசு கஜானாவில் இருந்து பணம் செலவிடப்படுவதை விரும்ப வில்லை என்றார்.

முன்னதாக இந்த 6 பேரும் பிரேசில் செல்வதற்காக ரூ.89 கோடியை மாநில அரசு ஒதுக்கியிருப்பதாக செய்தி வெளியானது.

அமைச்சரின் அறிவிப்பை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ள வில்லை. முதலில் அரசு செலவில் பிரேசில் செல்வதாக அறிவிக்கப்பட்டது. இப்போது திடீரென தங்கள் செலவில் பயணம் மேற்கொள்வதாக மாற்றிப் பேசுகிறார்கள். அமைச்சர்களின் பேச்சை நாங்கள் நம்பவில்லை. இப்படி மாற்றி மாற்றி பேசுவது பாஜக அரசின் வாடிக்கையாக உள்ளது.

இப்போதும் கூட கார்ப்பரேட் நிறுவனங்களின் செலவில்தான் அவர்கள் பிரேசில் செல்ல இருக்கின்றனர்.

சொந்த செலவில் செல்வதாக கூறுவது உண்மையல்ல. இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து அவர்கள் மறைமுகமாக லஞ்சம் பெறுகின்றனர் என்று கோவா மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் துர்காதாஸ் காமத் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in