Published : 25 Dec 2021 07:13 PM
Last Updated : 25 Dec 2021 07:13 PM

நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம்: அமித் ஷா வெளியிட்ட நல்லாட்சி குறியீடு

புதுடெல்லி: மத்திய நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை தயாரித்த 2021-ம் ஆண்டு நல்லாட்சிக் குறியீட்டில், நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை தயாரித்த 2021-ம் ஆண்டு நல்லாட்சிக் குறியீட்டை, நல்லாட்சி தினத்தையொட்டி புதுடெல்லி விஞ்ஞான் பவனில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா இன்று (சனிக்கிழமை) வெளியிட்டார்.

நல்லாட்சி குறியீடு பத்து துறைகள் மற்றும் 58 குறிகாட்டிகளை உள்ளடக்கியது ஆகும். நல்லாட்சி குறியீடு 10 துறைகள் மற்றும் 58 குறிகாட்டிகளை உள்ளடக்கியது. அவை: 1)விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள், 2) வணிகம் & தொழில்கள், 3) மனித வள மேம்பாடு, 4) பொது சுகாதாரம், 5.) பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள், 6) பொருளாதார நிர்வாகம், 7) சமூக நலன் & மேம்பாடு, 8) நீதித்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, 9) சுற்றுச்சூழல் மற்றும் 10) குடிமக்களை மையப்படுத்திய ஆளுகை. இதில் நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவில் ஏ குழுவில் உள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

மற்ற பிரிவுகளின் முதலிடம் பிடித்த மாநிலங்கள்: விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் - ஆந்திரப் பிரதேசம்; வணிகம் & தொழில்கள் - தெலங்கானா; மனித வள மேம்பாடு - பஞ்சாப்; பொது சுகாதாரம் - கேரளா; பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள் - கோவா; பொருளாதார நிர்வாகம் - குஜராத்; சமூக நலன் & மேம்பாடு - தெலங்கானா; சுற்றுச்சூழல் - கேரளா; குடிமக்களை மையப்படுத்திய ஆளுகை - ஹரியாணா.

இந்த நிகழ்வில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாடியபோது, “கடந்த 7 ஆண்டுகளில் நரேந்திர மோடி அரசு வழங்கிவரும் நல்லாட்சிக்காக மக்கள் நீண்ட காலமாகக் காத்திருந்தது. மோடி அரசால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சியின் பலன்களை மக்கள் பெறத் தொடங்கியதால், 2014 முதல் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் மோடி அரசின் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை, ஏனெனில் அது தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகம்” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பேசிய மத்தியப் பணியாளர், ஒய்வூதியர் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், ”குடிமக்களை மையப்படுத்திய நிர்வாகம் மோடி அரசின் ஆட்சி மாதிரியின் இதயத்தில் உள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆட்சியின் நிலையை மதிப்பிடுவதற்கு நல்லாட்சி குறியீடு உதவும்” என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x