ராணுவத்தில் தகவல் பரிமாற்றத்துக்கு புதிய செயலி

ராணுவத்தில் தகவல் பரிமாற்றத்துக்கு புதிய செயலி
Updated on
1 min read

புதுடெல்லி: இந்திய ராணுவத்தில் தகவல் பரிமாற்றத்துக்காக புதிய செல்போன் செயலி ‘அசிக்மா' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் தங்களுக்குள் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு ‘அவான்’ என்ற செல்போன் செயலி கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், எதிர்கால தேவைகளை கருத்திற்கொண்டு, நவீன தொழில்நுட்பத்துடன் ‘அசிக்மா’ என்ற புதிய செல்போன் செயலியை ராணுவ அதிகாரிகள் குழுஉருவாக்கி உள்ளது. இந்த செயலியை நேற்று முன்தினம் இந்தியராணுவம் அறிமுகம் செய்தது. இது, பல் அடுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் ஏராளமான சிறப்புகளை கொண்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 15 ஆண்டுகளாக இருந்த அவான் செயலிக்குப் பதிலாக தற்போது அசிக்மா என்ற புதிய செயலி கொண்டுவரப்பட்டுள்ளது.

குறிப்பாக தற்போதைய புவிசார் அரசியல்-பாதுகாப்பு சூழலின் பின்னணியில், ராணுவத்தின் நிகழ்நேர தகவல் பரிமாற்றம் மற்றும் செய்தியிடல் தேவைகளை இது பூர்த்தி செய்யும். இந்த செயலியானது மத்திய அரசின் மேக் இன் இந்தியா முயற்சியின் பலனாக உருவாக்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in