உத்தராகண்ட் பிரச்சாரத்தை வழிநடத்துவேன்: ராகுலை சந்தித்த ஹரீஷ் ராவத் தகவல்

உத்தராகண்ட் பிரச்சாரத்தை வழிநடத்துவேன்: ராகுலை சந்தித்த ஹரீஷ் ராவத் தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தராகண்ட் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரீஷ் ராவத் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை நேற்று சந்தித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “உத்தராகண்ட் மாநில காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக்குழு தலைவர் என்ற முறையில் பிரச்சாரத்தை வழிநடத்துவேன். இதற்கு அனைவரும் தங்களின் மேலான ஒத்துழைப்பை அளிப்பார்கள். தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் யார் முதல்வர் என கேட்கிறீர்கள். இது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.

முதல்வர் யார் என்பது குறித்து சட்டமன்ற கட்சிக் கூட்டம் நடத்தி, அதன் கருத்தை காங்கிரஸ் தலைவருக்கு தெரிவிப்போம். இதன் பிறகு முடிவு எடுக்கப்படும். காங்கிரஸ் தலைவரின் முடிவு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும்” என்றார்.

முன்னதாக கட்சி மேலிடத்தின் முடிவுகள் குறித்து ஹரீவ் ராவத் அதிருப்தி தெரிவித்து வந்தார். இதனால் உத்தராகண்டில் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படும் என ஊகங்கள் எழுந்தன. இதையடுத்து ஹரீஷ் ராவத்தை டெல்லிக்கு அழைத்து, கட்சித் தலைமை சமாதானப்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in