பஞ்சாபில் ரூ.1,200 கோடி விவசாய கடன் தள்ளுபடி

பஞ்சாபில் ரூ.1,200 கோடி விவசாய கடன் தள்ளுபடி
Updated on
1 min read

சண்டிகர்: பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் காங்கிரஸுக்கும் சிரோமணி அகாலி தளத்துக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி, முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் - பாஜக கூட்டணியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அனைத்து கட்சிகளும் விவசாயிகளை மையமாக வைத்து பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளன.

இந்த சூழலில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, சண்டிகரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

பஞ்சாபில் ஏற்கெனவே 5.63லட்சம் விவசாயிகளின் ரூ.4,610 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக பஞ்சாபில் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகள் பெற்ற ரூ.2 லட்சம் வரையிலான கடன் தள்ளுபடி செய்யப்படும். இதன்படி ரூ.1,200 கோடி விவசாய கடன் தள்ளுபடியாகும். 1.09 லட்சம் விவசாயிகள் பலன்அடைவார்கள். அடுத்த 10 நாட்களுக்குள் கடன்கள் தள்ளுபடியாகும். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களின்போது விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் வரும் 31-க்குள் ரத்து செய்யப்படும். உயிரிழந்த விவசாயிகளின் நினை வாக 5 ஏக்கரில் நினைவிடம் கட்டப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in