ம.பி.யில் மசோதா நிறைவேற்றம்: பொது சொத்து சேதப்படுத்தினால் போராட்டக்காரர்களிடம் வசூல்

ம.பி.யில் மசோதா நிறைவேற்றம்: பொது சொத்து சேதப்படுத்தினால் போராட்டக்காரர்களிடம் வசூல்
Updated on
1 min read

போபால்: பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினால் அதற்கான இழப்பீடுதொகையை போராட்டக்காரர்களிடம் வசூலிக்க வகை செய்யும் மசோதா ம.பி. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

போராட்டங்களின்போது கலவரம் ஏற்பட்டு போராட்டக்காரர்கள் பொதுச் சொத்துக்களையோ அல்லது தனியார் சொத்துக்களையோ சேதப்படுத்தினால், அவற்றுக்கான இழப்பீட்டை போராட்டக்காரர்களிடம் இருந்தேவசூலிக்க ம.பி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான மசோதாவை வியாழக்கிழமையன்று சட்டப்பேரவையில் மாநில உள்துறை அமைச்சர்நரோத்தம் மிஸ்ரா அறிமுகப்படுத்தினார். சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டால் அதற்கு போராட்டக்காரர்களிடம் இழப்பீடு கோருவது தொடர்பான விவகாரங்களை கவனிக்கவும் விரைவில் இழப்பீடு கிடைக்கவும் நடுவர் மன்றம் அமைக்க மசோதா வகை செய்கிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர், மசோதா குரல் ஓட்டு மூலம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் ஒப்புதலுக்குப் பின் இது சட்டமாகும். ஏற்கெனவே, உத்தரபிரதேசம், ஹரியாணா மாநிலங்களில் இதுபோன்ற சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்எல்ஏ குணால் சவுத்ரி கூறுகையில், ‘‘காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தபிறகு மசோதாவை நிறைவேற்றி உள்ளனர். மாநில பாஜக அரசுஅரசியல் சாசனத்துக்கு விரோதமாக செயல்படுகிறது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in