தலித் மாணவர்களை தாக்கியதாக பெங்களூரு தமிழ்ச்சங்க பள்ளி தலைமை ஆசிரியை மீது வழக்கு

தாக்குதலில் கை முறிந்த நிலையில் மாணவர்.
தாக்குதலில் கை முறிந்த நிலையில் மாணவர்.
Updated on
1 min read

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள காடுகொண்டனஹள்ளியில் பெங்களூரு தமிழ்சங்கத்தின் காமராஜர்உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. தமிழ்வழிப் பள்ளியான இதில் பெரும்பாலும் தமிழகத்தைச் சேர்ந்த ஏழை தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளியின் தலைமை ஆசிரியை ராஜேஷ்வரி ரகு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உள்ளிட்ட தலித் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்யுமாறு கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த ரகுவை தாக்கியதால் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார்.

இதையடுத்து மாணவரின் பெற்றோர் காடுகொண்டனஹள்ளி காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி, ஊழியர் மூர்த்திக்கு எதிராக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் இருவர் மீதும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டம், சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 34,323,324 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in