

புதுடெல்லி: இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 6,650 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளி விவரம் வருமாறு:
நாடு முழுவதும் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 358 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 122 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத அளவாகும். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 88 பேரும், டெல்லியில் 67 பேரும்,தெலங்கானாவில் 38 பேரும் தமிழ்நாட்டில் 34 பேரும், கர்நாடகாவில் 31 பேரும் குஜராத்தில் 30 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 114 பேர் குணமடைந்துள்ளனர்.
இதுபோல நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 6,650 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 77,516 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது ஒட்டுமொத்த பாதிப்பில் 0.22 சதவீதம் ஆகும். 24 மணி நேரத்தில் 374 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 4,79,133 ஆக அதிகரித்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.38 சதவீதம் ஆகும்.
கரோனா வைராஸால் பாதிக்கப்பட்டோரில் 98.4 சதவீதம் பேர் குணமடைந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பிடிஐ