32 ஆண்டுகள் 6,44,897 கடல் மைல் பயணத்த ஐஎன்எஸ் குக்ரி கப்பல் விடைபெற்றது

32 ஆண்டுகள் 6,44,897 கடல் மைல் பயணத்த ஐஎன்எஸ் குக்ரி கப்பல் விடைபெற்றது
Updated on
1 min read

புதுடெல்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது ஏவுகணை தாங்கி கப்பலான ஐஎன்எஸ் குக்ரி, நாட்டிற்கு 32 ஆண்டுகாலம் ஆற்றிய சிறப்புமிகு சேவைக்குப் பிறகு பணியிலிருந்து விடைபெற்றது.

மஸகான் கப்பல் கட்டும் தளத்தில், 23 ஆகஸ்ட் 1982 அன்று கட்டப்பட்ட இந்தக் கப்பல், அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் கே.சி.பந்த் மற்றும் காலஞ்சென்ற கேப்டன் மகேந்திரநாத் முல்லாவின் மனைவி சுதா முல்லா ஆகியோரால் தேச சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இந்த கப்பல் 28 கமாண்டிங் அதிகாரிகளாலும், 6,44,897 கடல் மைல்களுக்கு மேல் பயணித்தது. இது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட 30 முறை அல்லது 3 மடங்கு உலகத்தை சுற்றி வருவதற்கு சமம்.

இந்தக் கப்பல் மேற்கு மற்றும் கிழக்குப் பிராந்திய கடற்படைகளில் சேவையாற்றிய பெருமை உடையதாகும்.

ஐஎன்எஸ் குக்ரி, நாட்டிற்கு 32 ஆண்டுகாலம் ஆற்றிய சிறப்புமிகு சேவைக்குப் பிறகு நேற்று பணியிலிருந்து விடைபெற்றது.

இதையொட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல், பிஸ்வஜித் தாஸ் குப்தா சிறப்பு விருந்தினராக கொண்டார். இந்தக் கப்பலின் இன்னாள், முன்னாள் கமாண்டிங் அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in