

ஜம்மு: காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் மீது தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
காஷ்மீரில் படின்டி என்ற இடத்தில் மதரசாவுக்கு அருகில் நதீம் உல் ஹக் என்பவரிடம் இருந்து கடந்த ஜூன் மாதம் வெடிகுண்டு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், நதீம் அயூப் ரத்தேர், தலிப் உர் ரஹ்மான் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் 3 பேரும்பாகிஸ்தானில் இருந்து செயல்படும் எதிர்ப்பு முன்னணி என்றதீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் வாட்ஸ்அப் மூலம் அந்த அமைப்பின் கட்டளைப்படி செயல்பட்டு வந்ததும் குண்டு வெடிப்புகளை நடத்தசதி செய்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக 3 பேர் மீதும் ஜம்மு சிறப்பு நீதிமன்றத்தில் என்ஏஐசார்பில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது