தேர்தல் சட்ட திருத்த மசோதாவால் போலி வாக்காளர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: தலைமை தேர்தல் ஆணையர் நம்பிக்கை

தேர்தல் சட்ட திருத்த மசோதாவால் போலி வாக்காளர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: தலைமை தேர்தல் ஆணையர் நம்பிக்கை
Updated on
1 min read

பனாஜி: தேர்தல் சட்டத் திருத்த மசோதாவால் போலி வாக்காளர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவா சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, அந்த மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் நேற்று முன்தினம் பனாஜியில் ஆலோசனை நடத்தினார். அப்போது புதிய சட்டம் குறித்து அவர் கூறியதாவது:

தேர்தல் சட்டத் திருத்த மசோதாநாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. வாக்காளர் அட்டையுடன் ஆதாரைஇணைக்க வகை செய்யும் இந்தசட்டத்தை வரவேற்கிறோம். இதன்மூலம் போலி வாக்காளர் பிரச்சினைக்குமுற்றுப்புள்ளி வைக்க முடியும். ஒருவாக்காளரின் பெயர் பலமுறை இடம்பெறுவது தடுக்கப்படும். வாக்காளர் பட்டியல் தூய்மையாகும்.

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து ஊடகங்களில் விளம்பரம் வெளியிட வேண்டும். எந்த அடிப்படையில் அவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பதையும் கட்சிகள் விளக்க வேண்டும்.

வேட்பாளர்கள் குறித்த முழு விவரங்களையும் அரசியல் கட்சிகள் தங்களது இணையதளங்களில் வெளியிடவேண்டும். ஊடகங்கள், இணையதளத்தில் விவரங்களை வெளியிடுவதன் மூலம் வேட்பாளர் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியும்.

வேட்பாளர்களின் குற்றப் பின்னணிகுறித்து ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் சார்பில் சிறப்பு குழு நியமிக்கப்படும். அச்சு, மின்னணு ஊடகங்களில் வெளியாகும் போலி செய்திகள், பணம் கொடுத்து வெளியாகும் செய்திகள் ஆகியவை குறித்து தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கண்காணிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in