

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் பகுதியை இணைக் கும் ரகசிய சுரங்கப்பாதை இருப்பதை எல்லை பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எப்) கண்டு பிடித்துள்ளனர்.
இதுகுறித்து பிஎஸ்எப் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஜம்மு மாவட்டம் ஆர்.புரா பகுதி யில் உள்ள ஏல்லையில் ரகசிய சுரங்கப்பாதை இருப்பது தெரியவந்துள்ளது. எல்லைக்கு அப்பால் உள்ள பாகிஸ்தான் பகுதியில் தொடங்கும் இந்தப் பாதை இந்திய பகுதியில் முடிகிறது” என்றார்.
எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு அருகே, இந்திய பகுதியில் இதுபோன்ற சுரங்கப் பாதைகள் இருந்ததை, நிலப்பகுதியை ஊடுருவி பார்க்கும் ராடார்கள் உள்ளிட்ட இதர கருவிகளின் உதவியுடன் நமது ராணுவ வீரர்கள் ஏற்கெனவே கண்டு பிடித்துள்ளனர். இத்தகைய பாதைகளின் மூலம்தான் பாகிஸ் தான் தீவிரவாதிகள் இந்தியாவுக் குள் ஊடுருவி வருகிறார்கள்.
பதான்கோட் தாக்குதலுக்குப் பிறகு எல்லையில் ராணுவ வீரர்கள் கண்காணிப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது. மேலும் ஆளில்லாத சிறிய விமானங்கள் (ட்ரோன்) மூலம் எல்லையில் கண்காணிப்பு பணி நடப்பதால் தீவிரவாதிகள் ஊடுருவல் பலமுறை முறியடிக்கப்பட்டுள்ளது.