

லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள நீதிமன்றத்தில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தில் 2 பேர் பலியாகினர்.
லூதியானாவில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள கழிவறையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் எட்டு நீதிமன்ற அறைகள் உள்ளன. அப்பகுதியை போலீஸார் சுற்றி வளைத்து நீதிமன்ற வளாகத்தை காலி செய்து வருகின்றனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் வழக்கறிஞர் ஆர்எஸ் மாண்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த வெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்; ஐந்து பேர் காயமடைந்தனர். இது குண்டுவெடிப்பா அல்லது நாசவேலையா என பஞ்சாப் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.