ஹைதராபாத் பல்கலை.யில் தீவிரவாதம், ஜிகாதி இயக்கம்: அருண் ஜேட்லி தகவல்

ஹைதராபாத் பல்கலை.யில் தீவிரவாதம், ஜிகாதி இயக்கம்: அருண் ஜேட்லி தகவல்
Updated on
1 min read

ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம் ஆகியவற்றில் இடதுசாரி தீவிரவாதமும், சிறிதளவு ஜிகாதி இயக்க செயல்பாடும் உள்ளது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறிய தாவது: ஜவஹர்லால் நேரு பல் கலைக்கழகத்தைப் பொறுத்த வரை, இடதுசாரி தீவிரவாதம் செல்வாக்குடனும், சிறிதளவு ஜிகாதிகளும் உள்ளனர். கடந்த பிப்ரவரி 9-ம் தேதி நடந்த போராட்டத்தில் தங்களின் முகத்தை மறைத்துக் கொண்டு தேச விரோத வாசகங் களை எழுப்பினர்.

ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில், டாக்டர் அம்பேத்கரின் பெயர் நியாயமற்ற வகையில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த இரு பல்கலைக்கழகங் களில் நடந்த விவாதங்களில் சிறுபான்மை, மத தலைவர் கள் பங்கேற்காதது திருப்தி யளிக்கிறது.

இடதுசாரி தீவிரவாத உறுப்பினர்கள் விரித்த வலையில், மிதவாத இடதுசாரிகளும், காங்கிரஸும் விழுந்து விட்டன. எனவே, பாஜக சித்தாந்த ரீதியான சவாலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இதன் முதல் சுற்றில் பாஜக வென்றுள்ளது. இன்னும் சுற்று கள் உள்ளனவா என கேட்டால், பாஜக போரைத் தொடங்க வில்லை. மற்றவர்கள் மீண்டும் ஆரம்பித்தால் விவாதம் நிச்சயம் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in