

ரஜினிகாந்தின் புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது அவரது கட் அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்யக்கூடாது என உத்தரவிடக் கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேயால் என்ற இடத்தின் அருகேயுள்ள சிவில் நீதிமன்றத்தில் மணிவண்ணன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் மணிவண்ணன் கூறியிருப்பதாவது:
பேனர்கள் மற்றும் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை ஏற்க முடியாது. பாலாபிஷேகம் செய்வதால் பெருமளவில் பால் வீணாகிறது. பாலாபிஷேகம் செய்யக்கூடாது என ரஜினி தன் ரசிகர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு பொதுநல மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மனு மீதான விசாரணை ஏப்ரல் 11-ம் தேதி வர உள்ளது.