Last Updated : 21 Dec, 2021 07:04 AM

 

Published : 21 Dec 2021 07:04 AM
Last Updated : 21 Dec 2021 07:04 AM

ஒமைக்ரான் அச்சம்;குஜராத்தில் இரவுநேர ஊடரங்கு மீண்டும் அமல்: 31ம் தேதிவரை நீட்டிப்பு

பிரதிநிதித்துவப்படம்


காந்திநகர்:குஜராத்தில் கரோனா வைரஸ் பரவல் மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதைத் தடுக்கும் வகையில் அங்குள்ள 8 முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத், காந்திநகர், சூரத், ராஜ்கோட், வதோததரா, பாவ்நகர், ஜாம்நகர், ஜூனாகார்க் ஆகிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த 8 நகரங்களிலும் ஒமைக்ரான் பாதிப்பும், கரோனா பாதிப்பும் மெல்ல அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கையாக இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாரத்தின் இறுதி நாட்களில் மட்டும் இருந்து, தற்போது வரும் 31ம்தேதிவரை நீட்டித்து மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன.

அதேநரம் இரவு 12 மணி வரை அனைத்து வர்த்தகங்களும் நடக்க அனுமதி உண்டு. ரெஸ்டாரென்ட்கள், ஹோட்டல்களில் 75 சதவீதம் பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் 400 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது என தடை விதி்க்கப்பட்டுள்ளது.

இந்த ஊடரங்கு இரவு 1 மணிமுதல்காலை 5 மணிவரை பிறக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட நேரத்தில் யாரும் வெளியே வரத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் காரணங்கள், அவசரத்தேவைக்கு மட்டும் இந்த நேரத்தில் மக்கள் வெளியே வர அனுமதி்க்கப்படுவார்கள்.

கரோனா 2-வது அலைக்குப்பின், குஜராத்தில் முதல்முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிறமாநிலங்களில் கரோனா பாதுகாப்பு கட்டுப்பாடுகள் இருந்தாலும் ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை. கடந்த 8 மாதங்களுக்குப்பின் ஊரடங்கு குஜராத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்தியாவில் தற்போது ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 161 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநிலங்களவையில் நேற்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x