Published : 21 Dec 2021 12:20 PM
Last Updated : 21 Dec 2021 12:20 PM

கரோனா தடுப்பில் இந்தியாவின் பங்களிப்பு: உலக சுகாதார அமைப்பு புகழாரம்

புனே: பிம்ஸ்டெக் கூட்டமைப்பில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், பூடான், தாய்லாந்து, மியான்மர் நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த கூட்டமைப்பு சார்பில் பேனக்ஸ்-21 என்ற பெயரில் மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரண தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்படி மகாராஷ்ராவின் புனே நகரில் பேனக்ஸ் 21 கருத்தரங்கு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் உலக சுகாதார அமைப்பின் முதன்மை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் காணொலி வாயிலாக பேசியதாவது:

கரோனா தடுப்பூசி ஆராய்ச்சியின் மையமாக இந்தியா விளங்குகிறது. அந்த வகையில் சர்வதேச சமூகத்துக்கு இந்தியா மிகுந்த பங்களிப்பை அளித்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பல்வேறு நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது. இந்தியாவின் மக்கள் தொகை, மனித வளம், அடிப்படை உட்கட்டமைப்பு மிகப் பெரியது. இதன்காரணமாக பல்வேறு கரோனா தடுப்பூசி, கரோனா தடுப்பு மருந்துகள் இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. இந்திய ராணுவ வீரர்களும் மருத்துவ ஆராய்ச்சிக்கு முழுபங்களிப்பை அளித்து வருகின்றனர்.

சர்வதேச கரோனா தடுப்பு பணியில் இந்தியாவின் பங்களிப்பு அதிகம்.

இவ்வாறு சவுமியா சுவாமிநாதன் பேசினார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x