கரோனா தொற்று: சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 82,267: கடந்த 572 நாட்களில் இல்லாத அளவு குறைவு

கரோனா தொற்று: சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 82,267: கடந்த 572 நாட்களில் இல்லாத அளவு குறைவு
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 6,563 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் கரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 82,267 ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த 572 நாட்களில் இல்லாத அளவு குறைந்த எண்ணிக்கையாகும்.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 6,563

இதுவரை குணமடைந்தோர்: 34187017

குணமடைந்தோர் விகிதம் 98.39%

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 8,077

கரோனா உயிரிழப்புகள்: 477,554

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 132

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 82,267

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,37,67,20,359

நேற்று ஒரு நாள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 15,82,079

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

---

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in