

புதுடெல்லி:ஒவ்வொரு மனிதரின் மரபணுவும் தனித்துவமானது என்று இந்துக்கள் நம்புவார்கள் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.
ராஜஸ்தானில் ஜெய்பூர் நகரில் கடந்த காங்கிரஸ் சார்பி்ல் நடந்த பேரணியில் ராகுல் காந்திபங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் “இந்துத்துவாவாதிகள்தான் அதிகாரத்தை மட்டும் விரும்புவார்கள். கடந்த 2014ம் ஆண்டிலிருந்து ஆட்சியில் இருக்கிறார்கள்.
இந்துத்துவாவாதிகளை ஆட்சியி்லிருந்து மக்கள் அகற்றிவிட்டு உண்மையின் பாதையில் நடக்கும் இந்துக்களை ஆட்சியில் அமரவைக்க வேண்டும்.
இந்துத்துவாவாதிகள் தங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அதிகாரத்தை தேடுவதற்காக செலவிடுகிறார்கள். அதிகாரத்தைத் தவிர அவர்களுக்கு ஒன்றும் தேவையில்லை அதிகாரத்துக்காக எதையும் செய்வார்கள். அதிகாரத்தை தேடிஅலையும் பாதையைபின்பற்றுகிறார்கள், உண்மையைத் தேடும் பாதையல் இல்லை. இந்த தேசம் இந்துக்களுக்கானது, இந்துத்துவாவாதிகளுக்கானது அல்ல” எனத் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் பிரதமர் மோடி காசிக்கு சென்றிருந்ததையும், அங்கு நீராடியதையும் ராகுல் காந்தி குறிப்பிட்டு விமர்சித்தார். ராகுல் காந்தி கூறுகையில் “ பிரதமர் மோடி இந்துத்துவாவாதி, இந்து அல்ல. கங்கையில் இந்துத்துவாவாதி தனியாகக் குளிப்பார், இந்துக்கள் கோடிக்கணக்கான மக்களுடன் சேர்ந்து குளிப்பார்கள்” எனத் தெரிவித்தார்
இந்நிலையில் தர்மசாலாவுக்கு சென்றிருந்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ராணுவ வீரர்கள் மத்தியில் ேநற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில் “பாஜகவை ஒருபோதும் ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்தியதில்லை. பாஜகவின் கொள்கைகள் வேறு. பாஜகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் சிலர் ஆர்எஸ்எஸ்ஸில் இருக்கிறார்கள். இந்தியர்களின் மரபணு 40 ஆயிரம் ஆண்டுகளாக ஒன்று தான். நமது மூதாதையர்கள் ஒரே குலத்தவரே. அந்த மூதாதையர்களால் தான் நாடு வளம் பெற்றது. கலாச்சாரமும் பாரம்பரியமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்
இதற்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு பதில் அளித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.அதிலும் இந்து-இந்துத்துவாவாதி கருத்தை ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில் “ ஒவ்வொரு மனிதரின் மரபணுவும் வெவ்வேறானது, தனித்துவமானது என இந்துக்கள் நம்புவார்கள். ஆனால், இந்துத்துவா மீது நம்பிக்கையிருப்பவர்கள்தான் அனைத்து மக்களின் மரபணுவும் ஒரே மாதிரியானது என்று பேசுவார்கள்” என சாடியுள்ளார்