உ.பி.யில் இன்று தொடங்குகிறது பாஜகவின் ஜன் விஸ்வாஸ் யாத்திரை : ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

லக்னோ: உ.பி.யில் பாஜகவின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்று கொடியசைத்து தொடங்கிவைக்கும் பாஜகவின் 'ஜன் விஸ்வாஸ் யாத்திரை' இன்று தொடங்குகிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரங்களை மக்களிடையே தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.

உத்தரப் பிரதேசத்தில் 2017 சட்டமன்றத் தேர்தலில், 403 இடங்களைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி 312 இடங்களைக் கைப்பற்றியது, சமாஜ்வாடி கட்சி (SP) 47 இடங்களையும், பகுஜன் சமாஜ்வாடி கட்சி (BSP) 19 இடங்களையும் கைப்பற்றியது மற்றும் காங்கிரஸ் 7 சீட்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. மீதமுள்ள இடங்களை மற்ற வேட்பாளர்கள் கைப்பற்றினர்.

வரும் 2022 தேர்தலை முன்னிட்டு பாஜகவும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது. அவ்வகையில் பாஜகவின் 'ஜன் விஸ்வாஸ் யாத்திரை' இன்றுமுதல் உ.பியில் தொடங்குகிறது.

அம்பேத்கர் நகரில் ஜே.பி.நட்டா

இன்று முதல் ஆறு இடங்களில் 'ஜன் விஸ்வாஸ் யாத்ரா' நடைபெறும். இந்த யாத்திரையை முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி உள்ளிட்ட தலைவர்கள் பிஜ்னோர், மதுரா, ஜான்சி, காசிபூர், அம்பேத்கர் நகர் மற்றும் பல்லியா ஆகிய இடங்களில் இருந்து இந்த யாத்திரைகள் புறப்படும்.

அம்பேத்கர் நகரில் இருந்து ஜன் விஸ்வாஸ் முதல் யாத்திரையை பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இரண்டாவது யாத்திரையை மதுராவில் இருந்து முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைக்கிறார்.

ஜான்சியில் ராஜ்நாத் சிங்

மூன்றாவது யாத்திரையை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கொடியசைத்து ஜான்சியில் தொடங்கி கான்பூரில் நிறைவடையும்.

நான்காவது யாத்திரையை பிஜ்னூரில் உள்ள பிதுர்கோடியில் இருந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைக்கிறார். இந்த யாத்திரை ராம்பூரில் நிறைவடையும்.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஐந்தாவது பயணத்தை பல்லியாவிலிருந்து தொடங்கி பஸ்தியில் முடிப்பார்.

ஆறாவது யாத்திரையை மத்திய அமைச்சரும் அமேதி எம்பியுமான ஸ்மிருதி இரானி தொடங்கி வைக்கிறார்.

இந்த யாத்திரை காஜிபூரில் தொடங்கி அவரது சொந்த தொகுதியான அமேதியில் நிறைவடையும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in