Last Updated : 25 Mar, 2016 09:44 AM

 

Published : 25 Mar 2016 09:44 AM
Last Updated : 25 Mar 2016 09:44 AM

இன்ஸ்டாகிராமில் பிரியங்கா சோப்ராவை பின்தொடர்வோர் 60 லட்சமாக உயர்வு

சமூக வலைதளமான இன்ஸ்டா கிராமில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை பின் தொடர்வோர் எண்ணிக்கை 60 லட்சமாக உயர்ந்துள்ளது.

அமெரிக்க தொலைக்காட்சி யில் இவர் நடித்துவரும் ‘குவான்டிகோ’ தொடரே, இவரது சர்வதேச புகழ் அதிகரிக்க காரண மாகக் கூறப்படுகிறது.

‘குவான்டிகோ’ தொடரின் முதல் சீஸனில் பிரதான பாத்திரத் தில் நடித்திருந்த பிரியங்கா, அதற்காக பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதுகளில் விருப்பமான நடிகை என்ற விருதைப் பெற்றார். பிரியங்கா தற்போது ‘குவான்டிகோ’ தொடரின் 2-வது சீஸனில் நடித்து வருகிறார். மேலும் ‘பேவாட்ச்’ என்ற ஹாலிவுட் படத்திலும் வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார்.

தொடர் படப்பிடிப்புக்கு இடையிலும் அவர் தனது அனைத்து சமூக வலை தள பக்கங்களிலும் தனது பணிகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல் களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

இந்நிலையில் இன்ஸ்டா கிராமில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 60 லட்சத்தை கடந்ததை பிரியங்கா நேற்று முன்தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார். இதில் அவர் மிகுந்த மகிழ்ச்சி யும் நன்றியும் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் பாலிவுட் நட்சத்திரங்களான சல்மான் கானை 35 லட்சம் பேரும், ஷாருக் கானை 12 லட்சம் பேரும், அமிதாப் பச்சனை 13 லட்சம் பேரும் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் இவர்களை மிஞ்சியுள்ளார் பிரியங்கா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x