Published : 16 Dec 2021 03:03 PM
Last Updated : 16 Dec 2021 03:03 PM

வாக்காளர் அட்டை-ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? 8 எளிய வழிகள்

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி: வாக்காளர் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் முறையைச் சட்டமாக்க நடப்பு குளிர்காலக் கூட்டத் தொடரில் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வாக்காளர் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பதைத் தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கவில்லை என்றாலும், விருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர்கள் இணைக்கலாம், தங்கள் பெயரில் வேறு யாரேனும் வாக்களிப்பதைத் தடுக்கலாம்.

தேர்தல் ஆணையம் 4 வகையான தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர உள்ளது. அதில் முக்கியமானது, வாக்காளர் அட்டை, ஆதார் எண்ணை இணைப்பதாகும்.

தனிமனித அந்தரங்க உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து, இந்த தேர்தல் சீர்திருத்தத்தில், வாக்காளர்-ஆதார் அட்டையைத் தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கவில்லை. ஆனால், இரண்டையும் இணைத்துவிட்டாலும் அது வாக்காளர்களுக்குப் பாதுகாப்பானதுதான்.

அதேசமயம், ஆதார் எண்ணையும், வாக்காளர் அட்டையையும் இணைக்க விரும்புவோருக்கு 8 எளிய வழிகள் வழங்கப்பட்டுள்ளன.

அவை குறித்த விவரம்:

  1. Visit https://voterportal.eci.gov.in/ என்ற இணையதள்தில் லாக் இன் செய்ய வேண்டும்.
  2. உங்களின் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் அல்லது வாக்காளர் எண் பதிவு செய்ய வேண்டும்.
  3. எந்த மாநிலம், மாவட்டம், தனிப்பட்ட விவரங்களான பெயர், பிறந்த தேதி, தந்தை பெயரைக் குறிப்பிட வேண்டும்
  4. இந்த விவரங்களைப் பதிவு செய்தபின், சர்ச் பட்டனை க்ளிக் செய்து, அரசின் டேட்டாபேஸில் நீங்கள் பதிவிட்ட விவரங்கள் பொருத்தமாக இருந்தால் அவை திரையில் தெரியவரும்.
  5. ஆதார் எண்ணைப் பதிவிடுங்கள் என்ற கட்டம் திரையின் இடது பக்கத்தில் இருக்கும். அதை க்ளிக் செய்ய வேண்டும்.
  6. ஒரு சிறிய திரை உருவாகும். அதில் ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ளபடி உங்கள் பெயர், ஆதார் எண், வாக்காளர் அடையாள எண், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிட வேண்டும்.
  7. அனைத்து விவரங்களையும் சரியாக இணைத்தபின், அதைச் சரிபார்த்தபின், சப்மிட் பட்டனை அழுத்த வேண்டும்
  8. திரையில் உங்கள் விண்ணப்பம் வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டது என்ற தகவல் வரும்.

இந்த எளிய முறையின் மூலம் ஆதார் எண்-வாக்காளர் அட்டையை இணைக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x