Published : 15 Dec 2021 11:44 AM
Last Updated : 15 Dec 2021 11:44 AM

பெட்ரோல், டீசல் மீதான வரி மூலம் 3  ஆண்டுகளில் ரூ. 8 லட்சம் கோடி வருவாய் 

புதுடெல்லி: கடந்த 3 நிதியாண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான வரி மூலம் ரூ. 8 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்றவை சர்வதேச சந்தையில் கடந்த 15 நாட்கள் விலையின் சராசரி அடிப்படையில் நிர்ணயிக்கின்றன.

இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்து வந்த நிலையில் அதனை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டிதால் போக்குவரத்து கட்டணம் உயர்வால் விலைவாசி உயர்வும் அதிகரித்துள்ளது.

இதனையடுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை முறையே ரூ.5, ரூ.10 எனக் கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு குறைத்தது.

இந்தநிலையில் கடந்த 3 நிதியாண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான வரி மூலம் சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமன்

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் கூறியதாவது:

கடந்த 3 நிதியாண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான வரி மூலம் சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மொத்தத் தொகையில் 2020-21 ஆம் ஆண்டில் ரூ.3.71 லட்சம் கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.19.48 லிருந்து ரூ. 27.90 ஆக உயர்ந்தது. அதே காலகட்டத்தில் டீசல் மீதான வரி லிட்டருக்கு ரூ.15.33 லிருந்து ரூ. 21.80 ஆக உயர்ந்தது.

2018-ம் ஆண்டு அக்டோபர் 5 இல் இருந்து ஜூலை 6, 2019 நிலவரப்படி பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 19.48லிருந்து ரூ. 17.98 ஆக குறைந்தது. அதே நேரத்தில் டீசல் மீதான கலால் வரி ரூ. 15.33-ல் இருந்து ரூ. 13.83 ஆக குறைக்கப்பட்டது.

2021-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி வரை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி உயரும் சூழல் இருந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் முறையே ரூ. 32.98 மற்றும் ரூ. 31.83 ஆக இருந்தது, அதற்கு முன்பு கொஞ்சம் குறையும், பின்னர் மேலும் சரிந்து லிட்டருக்கு ரூ. 27.90 (பெட்ரோல்) மற்றும் ரூ. 21.80 (டீசல்) ஆக இருந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான செஸ்கள் உட்பட மத்திய கலால் வரிகள்: 2018-19ல் ₹ 2,10,282 கோடி, 2019-20ல் ரூ. 2,19,750 கோடி, 2020-21ல் ரூ. 3,71,908 கோடியாக இருந்தது.

இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்னதாக நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை முறையே லிட்டருக்கு ₹ 5 மற்றும் ₹ 10 என குறைக்கப்ட்து.

இதைத் தொடர்ந்து பல மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்து வருகின்றன.

இவ்வாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x