கரோனா மரணம்; இழப்பீடு குறித்து விரிவான விளம்பரம் செய்யாதது ஏன்?- மாநிலங்களைச் சாடிய உச்ச நீதிமன்றம் 

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி : கரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்து மாநில அரசுகள் விரிவான விளம்பரங்களை வெளியிடாவிட்டால், சாமானிய மக்களுக்கு எவ்வாறு தெரியும் என்று மாநிலங்களை உச்ச நீதிமன்றம் சாடியது.

கரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி வழக்கறிஞர் கவுரவ் குமார் பன்சால் உள்ளிட்ட பல்வேறு மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்ஆர் ஷா, நாகரத்னா கொண் அமர்வு விசாரித்து வருகிறது. கரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கக் கோரி ஏற்கெனவே மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்ஆர் ஷா, நாகரத்னா கொண் அமர்வு முன் வந்தது. அப்போது, கரோனாவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்து விரிவாந விளம்பரங்களை வெளியிடாத மாநில அரசுகள் குறித்து நீதிபதிகள் கடுமையாகச் சாடினர்.

நீதிபதிகள் அமர்வு குறிப்பிடுகையில் “ கரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து மாநில அரசுகள் விரிவான விளம்பரம் செய்யாவிட்டால், மக்களுக்கு எவ்வாரு நிவாரனம் பெறுவது குறித்த போர்டல் அட்ரஸும், ஆன் லைனில் எவ்வாறு விண்ணப்பம் செய்வதும் தெரியாமல் போய்விடும்.

அதிலும் சில மாநிலங்கள் இதுவரை விளம்பரம் செய்யவில்லை, எவ்வாறு விண்ணப்பிப்பது, அதன் இணையதள முகவரி குறித்து மக்களுக்கு நாளேடுகள், பிராந்திய மொழி நாளேடுகளிலும், சேனல்களிலும் இதுவரை விளம்பரம் செய்யவில்லை.

அதுமட்டுமல்லாமல் கரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து குறைதீர்க்கும் அமைப்பு, குழு உருவாக்க உத்தரவிட்டோம். அதையும் பல மாநிலங்கள் அமைக்கவில்லை.

இழப்பீடு பெறுவது குறித்து சாமானிய மக்களுக்கு விரிவான விளம்பரம் மூலம் தெரிவிக்காதவரை அவர்களால் அறிந்துகொள்ள முடியாது.

குஜராத் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அடுத்த விசாரணைக்கு வரும்போது, அனைத்து நாளேடுகளிலும் விளம்பரம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

‘‘மகாராஷ்டிர அரசு இதுவரை 84 ஆயிரம் மனுக்கள் பெற்றிருக்கிறது, ஆனால், இன்று மட்டும் 8 ஆயிரம் பேருக்குத்தான் இழப்பீடு வழங்கியிருக்கிறது. இது வேதனைக்குரியது. மீதமுள்ளவர்களுக்கு விரைந்து இழப்பீடு வழங்கிட வேண்டும்” என உத்தரவிட்டனர்.

கடந்த அக்டோபர் 4-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் ‘‘ஒருவர் கரோனாவில் உயிரிழந்திருந்தால், சான்றிதழில் அவ்வாறு குறிப்பிட்டிருந்தால், அவரின் குடும்பத்தாருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க மாநில அரசுகள் மறுக்கக்கூடாது. இழப்பீடு கோரி மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் அல்லது மாவட்ட நிர்வாகத்திடம் கரோனாவில் இறந்ததற்கான சான்றுடன் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் இழப்பீடு தொகை வழங்கப்பட்டிருக்க வேண்டும்’’ என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in