Published : 14 Dec 2021 12:07 PM
Last Updated : 14 Dec 2021 12:07 PM

வாரணாசியில் நள்ளிரவில் திடீரென நடந்து சென்ற பிரதமர் மோடி, ஆதித்யநாத்: வைரலான வீடியோ

வாரணாசி

பிரதமர் மோடியும், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் வாராணாசி தெருக்களில் நடந்து சென்ற காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு, கங்கை நதிக்கரையிலிருந்து செல்லும்போது, குறுகிய தெருக்கள் வழியாகவும், சாலை வழியாகவும் செல்ல வேண்டியதிருந்தது. இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.

இதையடுத்து, கங்கை நதிக்கரையிலிருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நேரடியாகச் செல்லும்வகையில் ரூ.339 கோடியில் காசி விஸ்வநாதர் வளாகத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.

பின்னர் கோயிலில் வழிபாடு நடத்திய அவர் தொடர்ந்து காரில் வாரணாசியின் வீதிகள் வழியாக பயணம் செய்த பிரதமர் மோடிக்கு உள்ளூர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தநிலையில் நேற்று நள்ளிரவு திடீரென பிரதமர் மோடியும், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் வாராணாசி தெருக்களில் நடந்து சென்றனர்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘வாரணாசியில் முக்கிய வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தேன், புனித நகருக்கு சிறந்த உள்கட்டமைப்பை உருவாக்குவது அவசியம்’’ எனக் கூறியுள்ளார்.

அப்போது சாலைகளில் திரண்டு இருந்த மக்கள் வரவேற்பு கொடுத்தனர். அவரை புகைப்படம் எடுத்தனர். பலர் செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர். அவர்கள் இருவரும் வாரணாசியின் பல தெருக்களிலும் சென்றனர். இந்த புகைப்படங்களை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

— Narendra Modi (@narendramodi) December 13, 2021

முன்னதாக அவர் காசியில் கங்கை நதியில் நடந்த மகா ஆராத்தியிலும் பங்கேற்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x