

ஷீனா போரா கொலை வழக்கில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய் துள்ள ஸ்டார் இந்தியா டிவியின் முன்னாள் சிஇஓவான பீட்டர் முகர்ஜி (59) தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் அடிப்படை ஆதாரமற்றவை என தெரிவித் துள்ளார். மேலும் தனது மனைவி இந்திராணி லட்சியத்தை அடைய எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காதவர் என்றும் குறிப்பிட் டுள்ளார்.
மும்பையின் ராய்கட் வனப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் ஷீனா போரா கொலை வழக்கில் அவரது தாயார் இந்திராணி முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த இந்திராணியின் முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா, கார் ஓட்டுநர் ஷ்யாம்வர் ராய் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக இந்திராணியின் 3வது கணவரும் ஸ்டார் இந்தியா டிவியின் முன்னாள் சிஇஓவுமான பீட்டர் முகர்ஜியையும் சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஜாமீன் கேட்டு பீட்டர் முகர்ஜி சார்பில் அவரது வழக்கறிஞர் குஷால் மோர் புதிய மனு ஒன்றை நேற்று மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் பீட்டர் கூறியிருப்பதாவது:
எனது மனைவி இந்திராணி தனது லட்சியத்தை அடைய எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காதவர். லட்சியத்துக்காக தனது சொந்த குழந்தைகளையும் இழக்க தயாராக இருந்தார். ஷீனாவை கொல்வதற்காக அவர் மீதான வெறுப்பை மறந்து நலம் விரும்பியாக மாறியது போல இந்திராணி நடித்தார். ராகுல் ஷீனா இடையிலான உறவுக்கு ஆட்சேபனை தெரிவித்தது கூட இந்திராணி தான். நான் அல்ல. கொலை தொடர்பாக இந்திராணி எனக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை. கொலை நடந்தபோது மகள் வித்தே வுடன் தான் அடிக்கடி தொலை பேசியில் தொடர்பு கொண்டு இந்திராணி பேசிக் கொண்டிருந் தார். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.