மத்திய இணை அமைச்சருக்கு எதிராக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்: மாநிலங்களவையில் தாக்கல்

மத்திய இணை அமைச்சருக்கு எதிராக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்: மாநிலங்களவையில் தாக்கல்
Updated on
1 min read

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கதேரியாவின் வெறுப்பு பேச்சு குறித்து விவாதிக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் மாநிலங்களவையில் ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தனர்.

அக்கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா இந்த நோட்டீஸை வழங்கினார். இதையடுத்து, தன் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என கதேரியா கூறினார். இதனிடையே, இதுபோன்று வெறுப்பூட்டும் வகையில் பேசிய அமைச்சரை பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் ராம் கோபால் வர்மா வலியுறுத்தினார்.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த அருண் மஹாவுர் சமீபத்தில் முஸ்லிம் இளைஞரால் கொல்லப்பட்ட தாகக் கூறப்படுகிறது. இவருக் காக நடந்த இரங்கல் கூட்டத்தில் கதேரியாவும் பதேபூர் சிக்ரி எம்.பி. பாபு லாலும் கலந்து கொண் டனர். இதில் சிலர் அருணை கொலை செய்த முஸ்லிம் சமுதாயத்தினரை பழிவாங்கப் போவதாக மிரட்டியதாகக் கூறப் படுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கதேரியா கூறும் போது, “இந்த நிகழ்ச்சி தொடர் பான வீடியோ காட்சியை முழுமையாக பார்க்காமல் ராம் கோபால் வர்மா என் மீது குற்றம்சாட்டுவது கவலை அளிக்கிறது” என்றார்.

பதவி நீக்கம் செய்ய வேண்டும்

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பி.எல்.புனியா கூறும்போது, “கதேரியா எம்.பி. யாக மட்டுமல்லாமல் அமைச்ச ராகவும் உள்ளார். இந்நிலையில் மதம் என்ற விஷத்தை அவர் பரப்பி வருவதை மன்னிக்க முடியாது. அவர் இனியும் அமைச் சரவையில் நீடிக்கக் கூடாது. இதுபோன்றவர்களை பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in