

இந்தியாவுக்கு 1947 ஆம் ஆண்டு அரசியல் ரீதியாக சுதந்திரம் கிடைத்திருந்தாலும் கூட, ராமர் கோயில் இயக்கத்தால் தான் மத சுதந்திரம் கிடைத்துள்ளது என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தேசிய இணைச் செயலாளர் சுரேந்திரா ஜெயின் தெரிவித்துள்ளார்.
சப் கே ராம் (அனைவருக்குமான ராமர்) என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் பேசியதாவது:
ராமர் கோயில் இயக்கத்தின் 490 ஆண்டு கால போராட்டத்தால், 13 கோடி குடும்பங்களில் விடாமுயற்சியால் இன்று ராமர் கோயில் கட்டப்படுகிறது. 1984 ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை 65 கோடி மக்கள் ராமர் கோயில் கட்ட குரல் கொடுத்து உதவியுள்ளனர்.
1947ல் இந்தியாவுக்கு அரசியல் ரீதியாக சுதந்திரம் கிடைத்தது. ஆனால், ராமர் கோயில் இயக்கத்தால் தான் இந்தியாவுக்கு மதச் சுதந்திரமும், கலாச்சார சுதந்திரமும் கிடைத்துள்ளது. மதச்சார்பற்ற அரசியல் எப்போதுமே நாட்டைப் பிரித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்எஸ்எஸ் இணை பொதுச் செயலாளர் அருண் குமார் பேசுகையில், ராமர் கோயில் இயக்கம் இந்து சமூகத்தை எழுச்சிபெறச் செய்துள்ளது. இது இந்துக்கள் தங்களை சுயத்தை அறிந்து கொள்ள உதவியுள்ளது என்றார்.