ஆப்கனுக்கு மருந்துகளை அனுப்பியது இந்தியா

ஆப்கனுக்கு மருந்துகளை அனுப்பியது இந்தியா
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதற்குப் பிறகு முதல் முறையாக அந்நாட்டுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவப் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.

மருத்துவப் பொருட்களை ஏற்றிச்சென்ற விமானம், ஆப்கானிஸ்தானி லிருந்து 10 இந்தியர்களையும், 94 ஆப்கன் சிறுபான்மையினரையும் அழைத்துக்கொண்டு வெள்ளிக்கிழமை இந்தியா திரும்பியது.

இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறும்போது ‘‘ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் மனிதாபிமான நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு, அம்மக்களுக்கு உதவும் நோக்கில் மருத்துவப் பொருட்களை இந்திய அரசு அனுப்பியுள்ளது. அந்தப் பொருட்கள் காபூலில் உள்ளஉலக சுகாதார மையத்திடம் ஒப்படைக்கப்படும். அவை, காபூலில் உள்ள இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனை மூலம் நிர்வகிக்கப்படும்’’ என்றார்.

தலிபான்கள் கடந்த ஆகஸ்ட் மாதம்ஆப்கனை கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து அந்நாட்டில் சிக்கியிருந்த இந்தியர்களையும், அங்கிருந்து வெளியேற விரும்பிய இந்துக்கள், சீக்கியர்உள்ளிட்ட ஆப்கன் சிறுபான்மையினரையும் இந்தியா அழைத்து வர ‘ஆப்ரேசன் தேவி சக்தி’ என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இதன்மூலம் இதுவரை 669 பேர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in