

முப்படைத் தளபதி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக அடிப்படையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று விமானப்படை வேண்டுகோள் விடுத்துள்ளது.
முப்படைத் தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் 8-ம் தேதியன்று குன்னூர் அருகே மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, அதிகாரிகள் உட்பட 13 பேர் இறந்தனர். இது தொடர்பாக விமானப் படை அதிகாரி மன்வேந்திர சிங் தலைமையில் முப்படை விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார்.
இதனிடையே, ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக பல் வேறு யூகங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. மேலும், இதுகுறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்கள் தெரிவித்தவர்கள் கைது செய்யப்பட்டுஉள்ளனர். இந்நிலையில், வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று விமானப் படை வேண்டுகோள் விடுத் துள்ளது. விமானப்படையின் அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த 8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விமானப் படை தலைமையில் முப்படை விசாரணை நடக்கிறது. விசாரணை விரைவாக முடிக்கப் பட்டு உண்மைகள் வெளியாகும். உண்மைகள் வெளிவரும்வரை, ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த வர்களின் கண்ணியத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் அடிப் படையற்ற யூகங்களை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
- பிடிஐ