

சூரிய கிரகணம் நாளை காலை 5.47 மணிக்கு தொடங்கி 9.08 மணி வரை நீடிக்கும். இதன் காரணமாக, இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 10 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்படும். இதைத் தொடர்ந்து 10 மணிக்குப் பிறகு கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
சூரிய கிரகணத்தை முன்னிட்டு, இன்று நடைபெற வேண்டிய சகஸ்ர கலசாபிஷேகம், நாளை காலை நடைபெற வேண்டிய அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.