

தமிழக முன்னாள் முதல்வரும், முன்னாள் கவர்னர் ஜெனரலுமான ராஜாஜியின் பிறந்த நாளையொட்டி அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
‘‘ ராஜகோபாலாச்சாரியின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலிகள் விடுதலைப் போராட்டத்திற்கும், நிர்வாகத்திற்கும், அறிவுத்திறனுக்கும் அவரின் பங்களிப்புக்காக அவர் நினைகூரப்படுகிறார்.
கவர்னர் ஜெனரலாக ராஜாஜி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட நிகழ்வு, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான அறிவிக்கை ஆகியவற்றை பார்வைக்குப் பகிர்ந்துள்ளேன் https://t.co/psAnq7i9bo
ராஜாஜி பரவலாக பாராட்டப்பட்ட ராஜதந்திரி. அவரின் நலன் நாடும் மிகவும் சிறந்த நண்பர்களில் ஒருவராக சர்தார் பட்டேல் இருந்தார்.
இந்தியாவின் கவர்னர் ஜென்ரலாக ராஜாஜி பதவியேற்ற போது சர்தார் பட்டேல் அவருக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை இங்கு காணலாம். https://t.co/FN2N2FNAs6’’ எனக் கூறியுள்ளார்.
இத்துடன் ராஜாஜிக்கு சர்தார் படேல் எழுதிய கடிதத்தையும் ட்விட்டர் பதிவில் இணைத்துள்ளார்.