

வடகிழக்கில் ஏராளமான வளங்கள் உள்ளதாகவும், உலகம் இன்னும் அதனை காணவில்லை என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
டெல்லியில் ‘மேகாலயன் ஏஜ்’ என்ற அங்காடியைத் திறந்து வைத்து அவர் பேசியதாவது:
மேகாலயாவின் மல்பரி பட்டு தவிர சால்வைகள், மூங்கில், கைவினைப் பொருட்கள் மற்றும் வடகிழக்கின் இதர பல்வேறு தனித்துவ பொருட்கள் இந்தியாவிலிருந்து வருவோருக்கான பெரிய சந்தையாக இருப்பதோடு மட்டுமின்றி உலகம் முழுவதிலுமிருந்து வருவோருக்கும் உள்ளது.
மேகாலயாவின் உயரிய கலாச்சாரம், பாரம்பரியம், கலைப் பொருட்களை காட்சிப்படுத்துவதாக இருக்கும் என்றும் இது மாநிலத்தின் குடிசைத் தொழிலுக்கு ஆதரவாக இருக்கும்.
வடகிழக்கில் ஏராளமான வளங்கள் உள்ளன. ஆனால் இதனை உலகம் இன்னும் காணவில்லை. முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் உண்மையான கர்மயோகியாக விளங்கினார். இந்தியாவை மகத்தான சக்தியாக மாற்றுவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.