கோவா சட்டப்பேரவை தேர்தல்: இன்று பிரியங்கா பிரச்சாரம்

கோவா சட்டப்பேரவை தேர்தல்: இன்று பிரியங்கா பிரச்சாரம்
Updated on
1 min read

கோவா சட்டப்பேரவைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று பிரச்சாரம் தொடங்குகிறார்.

பிரியங்கா இன்று ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றுவதுடன் பல்வேறு குழுக்களுடன் கலந் துரையாடுகிறார். இது குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறும் போது, “அசோல்னாவில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் பிரி யங்கா மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். கியூபெம் தாலுகா, மோர்பிர்லா கிராமத்தில் பழங்குடியின பெண் களுடன் கலந்துரையாடும் அவர், பிறகு மார்கோவ் எம்சிசி ஹாலில் மாணவர் செயற் பாட்டாளர்களுடன் பேசுகிறார். அக்வேம் பகுதியில் நடைபெறும் பிரியதர்ஷினி மகளிர் மாநாட்டில் பிரியங்கா உரையாற்ற உள்ளார். கட்சித் தொண்டர்கள் மாநாடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பிரபல செயற்பாட்டாளர்கள் கட்சியில் இணைய உள்ளனர்” என்று தெரிவித்தன.

பிரியங்கா காந்தியை சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று முன்தினம் சந்தித்து, ஒரு மணி நேரம் பேசினார். அப்போது உ.பி. மற்றும் கோவாவில் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது குறித்து பிரியங்காவுடன் பேசியதாக சஞ்சய் ராவத் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in