பெங்களூரு கமாண்ட் மருத்துவமனையில் கேப்டன் வருண் சிங்குக்கு தீவிர சிகிச்சை

வருண் சிங்
வருண் சிங்
Updated on
1 min read

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயம் அடைந்து உயிர் தப்பிய விமானப்படை கேப்டன் பெங்களூரு கமாண்ட்மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை குரூப் கேப்டன்வருண் சிங் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். அவருக்கு வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

3 முக்கிய அறுவை சிகிச்சை

இந்நிலையில் அடுத்தக்கட்ட சிகிச்சைக்காக கேப்டன் வருண் சிங் நேற்று வெலிங்டனில் இருந்து பெங்களூருவுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டார். அங்குள்ள ராணுவ கமாண்ட் மருத்துவமனையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பலத்த தீக்காயங் களுடன் மீட்கப்பட்டுள்ள அவருக்கு 3 முக்கிய அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நாடாளுமன்றத்தில் பேசுகையில், ‘‘கேப்டன் வருண் சிங் தற்போதுஉயிர் காக்கும் கருவியின் உதவியுடன் சிகிச்சைப் பெற்றுவருகிறார். அவரது உயிரை காப்பாற்ற எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள் ளது'' என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கேப்டன் வருண் சிங்கின் தந்தை கர்னல் கே.பி.சிங் (ஓய்வு) தனது மகனை பார்ப்பதற்காக பெங்களூரு வந்தடைந்தார். கமாண்ட் மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை விபரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் கர்னல் கே.பி.சிங் கூறும்போது, ‘‘தற்போதைய நிலை யில் எதையும் கூற முடியாது. எனக்கு எதுவும் தெளிவாக தெரியவில்லை. கேப்டன் வருண் சிங் ஆபத்தான நிலையில் இருக் கிறார். மருத்துவர்கள் அவருக்கு தேவையான அனைத்து தீவிர சிகிச்சைகளையும் வழங்கி வருவ தாக கூறினர்''என்றார்.

விபத்தை தவிர்த்ததற்காக விருது பெற்றவர்

ஹெலிகாப்டர் விபத்தியில் உயிர் தப்பிய ஒரே நபரான கேப்டன் வருண் சிங் இந்திய விமானப்படையில் குரூப் கேப்டன் பொறுப்பில் உள்ளார். குன்னூர் ராணுவ கல்லூரியில் பயிற்சியாளராக உள்ள கேப்டன் வருண் சிங் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தை அழைத்துவர சென்ற போது விபத்தில் சிக்கினார்.

கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி தேஜஸ் போர் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறின் காரணமாக பெரும் விபத்து நிகழும் நிலை ஏற்பட்டது. அப்போது தீவிர உடல் மற்றும் மன பலத்துடன் துரிதமாக செயல்பட்டு அந்த போர் விமான விபத்தை தவிர்த்தார். இதற்காக கடந்த சுதந்திர தின விழாவில் உயரிய‌ சௌர்யா சக்ரா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in