சஹாரா குழுமத்தின் சொத்துகளை விற்க ‘செபி’க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

சஹாரா குழுமத்தின் சொத்துகளை விற்க ‘செபி’க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
Updated on
1 min read

நிதி மோசடி வழக்கில் சிக்கிய சஹாரா குழுமத்தின் சொத்துகளை விற்க இந்திய பங்குச் சந்தை பர்வர்த்தனை வாரியமான ‘செபி’க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் ரூ.24,000 கோடி நிதிமோசடி வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவரை ஜாமினில் விடுவிக்க ரூ.5,000 கோடியை ரொக்கமாகவும் அதே அளவு தொகைக்கு வங்கி உத்தரவாதங்களையும் அளிக்க கோர்ட் நிபந்தனை விதித்தது. ஆனால் அவரால் இந்தத் தொகையினை செலுத்த முடியாததால் சிறையிலேயே இருந்து வருகிறார்.

இந்நிலையில் தங்களிடம் உள்ள ரூ.40,000 கோடி மதிப்பிலான சொத்துகளை விற்க முடியவில்லை என்று சஹாரா குழுமம் கூறியதையடுத்து, இந்தச் சொத்துகளை விற்க செபிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

சஹாரா குழுமத்திற்கு அயல்நாடுகளில் மிகப்பெரிய ஹோட்டல்கள் உள்ளன. நியூயார்க்கில் பிளாசா என்பதும் சஹாராவுக்குச் சொந்தமானதே. மேலும் லண்டனில் கிராஸ்வீனர் ஹவுஸ் என்பதும் சஹாராவுக்குச் சொந்தமானதே. இதைத் தவிர இந்தியாவிலும் ஏகப்பட்ட ரியல் எஸ்டேட் சொத்துகளை தன் வசம் வைத்துள்ளது சஹாரா.

சிறு முதலீட்டாளர்களுக்கு பாண்டுகளை விற்று கோடிக்கணக்கான ரூபாய்களை சஹாரா வசூல் செய்திருந்தது. இது சட்ட விரோதம் என்று தெரிய வந்தது. இந்தத் தொகைகளை முதலீடு செய்பவர்களிடமே திருப்பி அளிக்க கோர்ட் உத்தரவிட்டிருந்தது, ஆனால் இந்த கோர்ட் உத்தரவுக்கு செவி சாய்க்காததால் கடந்த மார்ச் 2014 சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in