Published : 09 Dec 2021 03:51 PM
Last Updated : 09 Dec 2021 03:51 PM

அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ஆஸி.வீரரின் ட்வீட்; 2021-ம் ஆண்டில் அதிகமாக ரீட்வீட், லைக் பெற்றவை: ஒரு பார்வை

2021-ம் ஆண்டில் அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்ட, ரிட்வீட் ஆஃப் தி இயராக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ட்வீட் இருக்கிறது. விராட் கோலி தனது மகள் பிறந்ததை அறிவித்தது அதிகமாக லைக் செய்யப்பட்டதாக இருக்கிறது.

#Covid19, #FarmersProtest, #TeamIndia, #Tokyo2020, #IPL2021, #IndVEng, #Diwali, #Master (movie), #Bitcoin and #PermissionToDance ஆகியவை அதிகமாக ட்ரெண்டிங் ஆன ஹேஷ்டேகுகள்.

2021 ஜனவரி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை ட்விட்டர் தளத்தில் அதிகமாக லைக் செய்யப்பட்டவை, ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அதன் விவரம் வருமாறு:

இந்தியாவில் கரோனா 2-வது அலை உருவானபோது, ஐபிஎல் டி20 தொடரிலும் கரோனா தொற்று ஏற்பட்டதால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அப்போது இந்தியர்களின் கரோனா நிவாரண நிதிக்காக ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் கரோனா நிவாரணமாக வழங்கி அதை ட்வீட் செய்தார். கம்மின்ஸ் கருணை உள்ளம், உதவும் உள்ளத்தைப் பாராட்டியும், ஊக்கப்படுத்தியும் உலகம் முழுவதும் ஏராளமானோர் அந்த ட்வீட்டை ரீட்வீட் செய்தனர். இதுதான் 2021-ம் ஆண்டில் அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்டதாகும். இன்றைய தேதிவரை 1.14 லட்சம் முறை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. 21,900 முறை ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

விராட் கோலி, தனது மனைவி அனுஷ்காவுக்குப் பெண் குழந்தை பிறந்ததை ட்விட்டர் மூலம் அறிவித்தார். இந்த ட்வீட் அதிகமான லைக்குகளைப் பெற்று, இந்த ஆண்டின் அதிகமான லைக், அதாவது 5.38 லட்சம் லைக் பெற்ற ட்வீட்டாக இருக்கிறது.

கடந்த ஆண்டு அனுஷ்கா சர்மா கருவுற்று இருந்ததை விராட் கோலி ட்விட்டரில் அறிவித்திருந்தார். அது 2020-ம் ஆண்டில் அதிகமாக லைக் செய்யப்பட்ட ட்வீட்டாக இருந்தது.

அரசு சார்பில் அதிகமாக ரிட்வீட் செய்யப்பட்டதாக பிரதமர் மோடி, முதல் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட புகைப்படம் இருக்கிறது. மருத்துவர்கள், அறிவியல் வல்லுநர்கள், சுகாதாரப் பணியாளர்களின் பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பதிவிடப்பட்டது. இது 45,100 முறை ரீட்வீட் செய்யப்ட்டது. 2.25,800 லட்சம் லைக்குகளைப் பெற்றது.

அதிகமான லைக் பெற்ற அரசின் ட்வீட்டாக பிரதமர் மோடி, இந்திய அணி காபாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் பெற்ற வரலாற்று வெற்றியைப் பாராட்டி ட்வீட் செய்திருந்தார். அந்த ட்வீட்டுக்கு 2.98 லட்சம் லைக்குகள் கிடைத்தன.

வர்த்தகத்தில் அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்ட வகையில் டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவது குறித்த ட்வீட் அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்டது. இந்த ட்வீட் 82,900 முறை ரீட்வீட் செய்யப்பட்டு, 4,04,000 லைக்குகளைப் பெற்றது.

பொழுதுபோக்கு அம்சத்தில் நடிகர் விஜய் ‘பீஸ்ட்’ திரைப்படம் குறித்துப் பதிவிட்ட ட்வீட் 1.39 லட்சம் முறை ரீட்வீட் செய்யப்பட்டது, 3.41 லட்சம் லைக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தது.

விளையாட்டில், ஐபிஎல் டி20 தொடரில் தோனியின் ஆட்டத்தைப் பாராட்டி விராட் கோலி பதிவிட்ட ட்வீட் 91,600 முறை ரீட்வீட் செய்யப்பட்டது. 5.29 லட்சம் லைக்குகளைப் பெற்றது.

#கோவிட்19, #ஆப்கானிஸ்தான், #உத்தரகாண்ட், #இந்தியன்ஆர்மி, #டோக்கியோ2020, #கிரிக்கெட்ட்விட்டர் ஆகியவை அதிகமாகப் பதிவிடப்பட்ட ஹேஷ்டேகுகளாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x