சோனியா காந்தியின் 75-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, நிதின் கட்கரி வாழ்த்து

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடி | கோப்புப் படம்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடி | கோப்புப் படம்.
Updated on
1 min read

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி, நிதின் கட்கரி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவராக மீண்டும் சோனியா காந்தி 2019 ஆகஸ்ட் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஆண்டு கோவிட்-19 நிலைமை காரணமாகவும், தற்போது ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவை வழங்குவதற்காகவும் சோனியா காந்தி தனது பிறந்த நாளைக் கொண்டாடவில்லை.

மேலும் இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் பலியானதை அடுத்து தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 75-வது பிறந்த நாளுக்குத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "சோனியா காந்தி ஜியின் பிறந்த நாளுக்கு வாழ்த்துகள். அவரது நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது வாழ்த்துச் செய்தியில், ''இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in