

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்துக்குள்ளான விமானப்படையின் அதிநவீன எம்ஐ7வி5 ஹெலிகாப்டர் கடந்த 2012ம் ஆண்டு விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன் சில விபத்துகளை இந்த ரக ஹெலிகாப்டர்கள் சந்தித்துள்ளது தெரியவந்துள்ளது.
கோவை சூளூர் விமானநிலையத்திலிருந்து நீலகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரி ஆய்வுக்காக நேற்று காலை இரு ஹெலிகாப்டர்கள் சென்றன.
அதில் ஒரு ஹெலிகாப்டரில் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரின் மனைவி, பிபின் ராவத் உதவியாளர், பாதுகாப்பு கமாண்டோக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டர்தான் குன்னுர் அருகே மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் ஹெலிகாப்டரில் பயணித்த பிபின் ராவத் அவரின் மனைவி உள்ளிட்ட 13பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் மீட்கப்பட்டு வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிக்ைசக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான எம்ஐ17வி5 ரக ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் கடந்த 2012ம் ஆண்டு சேர்க்கப்பட்டது. ரஷ்யாவிலிருந்து வாங்கப்பட்ட இந்த ஹெலிகாப்டரை ரஷ்ய ஹெலிகாப்டரின் துணை நிறுவனமான கசான் நிறுவனம் தயாரித்தது. இந்த ஹெலிகாப்டரில் காலநிலையைத் தெரிந்து கொள்ளும் ரேடார், இந்த தலைமுறைக்கான இரவுநேரத்தில் துல்லியமாக இலக்குகளைப் பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டுளளன.
விமானப்படையில் சேர்க்கப்பட்ட கடந்த 10 ஆண்டுகளில் இந்த எம்ஐ17வி5 ரக ஹெலிகாப்டர்கள் இதற்கு முன்பும் சில விபத்துக்களைச்சந்தித்துள்ளது.
கடந்த மாதம் நவம்பர் 8ம் தேதி கிழக்கு அருணாச்சலப்பிரதேசத்தில் ராணுவத் தளத்தில் தரையிறங்கும்போது திடீரென தரையில் மோதியது. ஆனால், சிறுவிபத்து என்பதால், விமானிகள், வீரர்கள் சிறிய காயங்களுடன் தப்பித்தனர்.
2018ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி உத்தரகாண்ட் மாநிலம், இமாலயமலைப்பகுதியில் கேதார்நாத் அருகே மலைப்பகுதியில் விழுந்து. ஆனால் அதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்டரில் இருந்த 6பேரும் எந்தவிதமான காயமும் இன்றி தப்பினர்.
கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி அருணாச்சலப்பிரதேசம், தவாங் அருகே சீனாவின் எல்லைக்கு அருகே இந்த ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அப்போது ஹெலிகாப்டரில் பயணித்த 7 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.
2013ம் ஆண்டு ஜூன் 15்ம் தேதி, உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது இந்த ரக ஹெலிகாப்டர் மீட்புப்பணியில் ஈடுபட்டு, கேதார்நாத்திலிருந்து திரும்பியது. அப்ோபது நடந்த விபத்தி்ல் ஹெலிகாப்டரில் இருந்த 8 பேரும் உயிரிழந்தனர்.
கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி குஜராத்தின் ஜாம்நகர் விமானப்படைத் தளத்திலிருந்து 10கி.மீ தொலைவில் இந்த எம்ஐ ரக ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது. இதில் ஹெிகாப்டரில் பயணித்த 9 வீரர்களும் உயிரிழந்தனர்.
கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி அருணாச்சலப்பிரதேசம் தவாங் அருகே நடந்த விபத்தி்்ல் ஹெலிகாப்டரில் பயணித்த 12 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.
இந்த எம்ஐ17வி5 ரக ஹெலிகாப்டரை வாங்குவதற்கு கடந்த 2008ம் ஆண்டு ரஷ்யாவுடன், மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. அதன்பின் முதல் 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்பேட்ச் ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டன.
ஆனால், 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம்தான் விமானப்படையில் முறைப்படி இந்த ரக ஹெலிகாப்டர்கள் சேர்க்கப்பட்டன. விமானப்படையில் சேர்க்கப்பட்டதிலிருந்து பெரிய நம்பிக்கைக்குரிய ஹெலிகாப்டராக இந்த ரகம் வலம்வந்தது.
ராணுவத்தில் வீரர்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லவும், ராணுவத் தளவாடங்களை கொண்டு செல்லவும், உயரமான இடங்களில் பொருட்களை கொண்டு சேர்க்கவும் இந்த ரக ஹெலிகாப்டர்கள் அதிகமாகப் பயன்பட்டன.
இந்த ஹெலிகாப்டரில் செல்ஃப் டிபென்ஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டிருந்தது. எதிரிகளின் இலக்குகளை துல்லியமாகத் தாக்கலாம், நகரும் இலக்குகள், ராக்கெட் வீச்சு, எந்திரத்துப்பாகிகள் என தாக்குதல் வசதிகளும் இந்த ஹெலிகாப்டரில் அதிகமாக இருந்தன.
மணிக்கு அதிகபட்சமாக 250கி.மீ வேகத்தில் செல்லும் இந்த ஹெலிகாப்டரில் அதிநவீன டிவி3-1117விஎம் எந்திரம் பொருத்தப்பட்டிருந்தது.உலகிலேயே அதநவீன ஹெலிகாப்டர்களில் இந்த எம்ஐ17வி5 ஹெலிகாப்டரும் ஒன்றாகும். இதன் வடிவமைப்பு, அம்சங்கள், தொழில்நுட்பம், திறன் அனைத்தும் கடந்த கால தலைமுறை ஹெலிகாப்டர்களைவிட அதிநவீனமானது என்பது குறிப்பிடத்தக்கது.