2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்திவைப்பு: மக்களவையில் மத்திய அரசு தகவல்

மத்திய உள்துறை இணைஅமைச்சர் நித்யானந்த ராய் | கோப்புப்படம்
மத்திய உள்துறை இணைஅமைச்சர் நித்யானந்த ராய் | கோப்புப்படம்
Updated on
1 min read


கரோனா தொற்று பரவல் காரணமாக 2021ம் ஆண்டில் நடக்க இருந்த மக்கள் தொைகக் கணக்கெடுப்பும், அது தொடர்பான கள நடவடிக்கைகளும் ஒத்திைவக்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதா எப்போது நடக்கும் என்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய உள்துறை இணைஅமைச்சர் நித்யானந்தா ராய் பதில் அளித்தார்.

அவர் பேசுகையில், “ 2021ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி இந்திய அ ரசின் அரசாணையில் தெரிவி்க்கப்பட்டது. ஆனால், கரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பும், அது தொடர்பான கள நடிவடிக்கைகளும் ஒத்தி ைவக்கப்பட்டுள்ளன.

மக்கள் தொகைக் கணக்கெடுப்புபணிகளை நடத்துவதர்கு மக்கள் தொகைக்கணக்கெடுப்பு அதிகாரிகளாக பல்வேறு மாநிலங்களில் 372 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது மக்களிடம் அவர்களின் தாய்மொழியிலும், பிற இருமொழிகள் தெரிந்தவர்களும் உடன் சென்று கணக்கெடுப்பு பணிகளை செய்வார்கள்” எனத் தெரிவித்தார்.

பிஹாரில் சாதிரீதியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவது குறித்து விரைவில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி முடிவு எடுக்கப்படும் என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை மக்களவையில் மத்திய அரசு வெளியி்ட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in